தேஜஸ்வி இந்த முறை எப்படியும் பீஹார் முதல்வராகி விடுவார்: லாலு நம்பிக்கை

2

பாட்னா: தேஜஸ்வி எப்படியும் இந்த முறை பீஹார் முதல்வராகிவிடுவார் என்று அவரது தந்தையும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் கூறி இருக்கிறார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். லாலு பிரசாத் மேலும் கூறியதாவது;

நவ.14ம் தேதி பீஹாரில் அரசாங்கம் மாறிவிடும். இந்த முறை தேஜஸ்வி முதல்வராவார். ராஷ்டிரிய ஜனதா தள தேர்தல் பிரசாரத்தில் மட்டுமல்ல, மாநிலம் முழுவதில் இருந்தும், அவருக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

தேர்தல் பிரசாரம் சிறப்பாக நடக்கிறது. எங்கள் கூட்டணி வெற்றி பெறும். உள்ளூர் நிர்வாகிகள் சிறப்பாக செயல்படுகின்றனர்.

இவ்வாறு லாலு கூறினார்.

எதிர்க்கட்சிகள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள தேஜஸ்வி, ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக சதீஷ்குமார் களம் காண்கிறார். இவர்கள் தவிர, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர் சஞ்சல்குமாரும் களத்தில் உள்ளார்.

Advertisement