டிரம்ப் குற்றச்சாட்டை குற்றச்சாட்டை நிராகரித்தது நைஜீரியா
 அபுஜா: நைஜீரியாவில் ஒரு திட்டமிட்ட கிறிஸ்துவ இனப்படுகொலை நடப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறிய குற்றச்சாட்டை, அந்நாடு நிராகரித்துள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், திட்டமிட்ட கிறிஸ்துவ இனப்படுகொலை நடப்பதாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், இதை தடுக்க தவறினால், அந்நாடு மீது போர் தொடுக்க தயாராக இருக்குமாறு அமெரிக்க போர் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இது குறித்து நைஜீரிய அரசு தெரிவித்திருப்பதாவது: அனைத்து மதத்தினரும் எங்கள் நாட்டில் சமமாக நடத்தப்படுகின்றனர். எந்தவொரு குறிப்பிட்ட மதத்தவர் மீது இனப்படுகொலை எதுவும் மேற்கொள்ளவில்லை. பயங்கரவாதம், கொள்ளை மற்றும் குற்றச் செயல்கள் உள்ளிட்ட சிக்கலான பிரச்னைகளால், நாட்டில் வன்முறைகள் அதிகரித்து வருகிறது.
நைஜீரியா ஒரு இறையாண்மை கொண்ட நாடாகும். தன்னிச்சையாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்பதை அமெரிக்காவுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு மற்றும் நைஜீரியாவின் பாதுகாப்பு நிலைமை குறித்த தவறான புரிதல்களை சரிசெய்ய, அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  அவர்களே பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக கூறுகிறார்கள். ஆகையால் டிரம்ப் உடனே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்நாட்டுடன் சமரசம் காணவேண்டும். எதற்கெடுத்தாலும் போர் போர் என்றால், அப்புறம் எல்லோரும் போரில்தான் அழியவேண்டி இருக்கும்.மேலும்
-     
        
 தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் மஹா ஸம்ப்ரோஷணம்; 30 ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் பரவசம்
 -     
        
 தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும்
 -     
        
 பீஹார் தேர்தலில் ஓட்டளிக்க பயணம்; ரயில்வே ஸ்டேஷனில் தள்ளுமுள்ளு
 -     
        
 சுங்கத்துறையின் விசாரணை முடிவு தெரியாமலே கிடப்பில் போடப்படும் கடத்தல் வழக்குகள்
 -     
        
 ஆங்கிலத்தில் புலமை இல்லாததால் 7,000 லாரி டிரைவர்கள் வேலை போச்சு
 -     
        
 வங்கதேச தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது கலிதா ஜியாவின் பி.என்.பி.,