தி.மு.க., உறுப்பினர் வாரிசுகளுக்கு உதவித்தொகை

நாமக்கல், தி.மு.க., உறுப்பினர்களின் குடும்பத்தில் உயர்கல்வி படிக்கும் வாரிசுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
தி.மு.க., உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு, உயர் கல்விக்கான ஸ்காலர்ஷிப் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம், நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமர், எம்.பி., தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், தொழிற்கல்வி படிக்கும், 12 பேர், பட்டப்படிப்பு படிக்கும், 4 பேர் என, மொத்தம், 16 பேருக்கு உதவித்தொகை வழங்கினார்.

ராசிபுரம், வெண்ணந்துார், சேந்தமங்கலம், நாமக்கல் மோகனுார், புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த, தி.மு.க., கிளை, வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் பி.எல்.ஏ.,-2 உறுப்பினர்களின் குடும்பத்தில் உயர்கல்வி படிக்கும் வாரிசுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மாநில நிர்வாகிகள் ராணி, டாக்டர் மாயவன், நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement