லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்: 53 கிலோ பிரிவுக்கு தயாராகும் மீராபாய் சானு
புதுடில்லி: 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள பளுதுாக்கும் போட்டியில் பங்குபெற, பெண்கள் பிரிவான 53 கிலோ எடை பிரிவில் போட்டியிடத் தயாராகி வருகிறார் மீராபாய் சானு.
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பளுதூக்குதல் திட்டத்தை விரிவுபடுத்த சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு புதிய விதிகளை வகுத்துள்ளது. அதன்படி, பளுதுாக்கும் பிரிவில் 12 போட்டிகள் (ஆறு ஆண்கள், ஆறு பெண்கள்) போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. பிரிவுகள் மாற்றம் ஒரு ஆண்டிற்குள் 2வது முறை செய்யப்பட்டுள்ளது.
இந்திய பளுதுாக்கும் வீராங்கனையான மீராபாய் சானு,டோக்கியோ ஒலிம்பிக்கில் 49 கிலோ பிரிவில் சானு வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.அவர் 2028 லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக்போட்டியில் பங்கேற்க உள்ளார்.
இது குறித்து தலைமை தேசிய பயிற்சியாளர் விஜய் சர்மா கூறியதாவது: 2028 ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் பங்கேற்க மீராபாய் 31, 53 கிலோ பிரிவில் போட்டியிடத் தயாராகி வருகிறார்.அடுத்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி வரை அவர் தனது தற்போதைய 48/49 கிலோ பிரிவில் தொடர்ந்து போட்டியிடுவார்.
53 கிலோ வரை பருமனாக்குவது சானுவுக்கு சாதகமாக இருக்கும்.
ஆனால் மணிப்பூரில் அடுத்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி வரை தனது பழைய எடைப் பிரிவிலேயே தொடருவார்.49 கிலோவை நீக்குவது மீராபாய்க்கு ஒரு நல்ல விஷயம்.இவ்வாறு விஜய் சர்மா கூறினார்.
மேலும்
-
தென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; மீண்டும் ரிஷப் பன்ட்!
-
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
-
900 முறை பாங்காக் பயணித்த தொழிலதிபர்: அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி
-
முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்வதில் யாருக்கு என்ன பயன்? முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
இந்திய விமானப்படை சாகசத்தை கண்டு ரசித்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
-
பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றச்சாட்டு: அண்ணாமலை காட்டம்