குறிவைத்து அடிக்கும் பா.ஜ.,வுக்கு முதல் பலி நான்

4

ஓட்டுகள் அதிக சதவீதம் இருந்தால் தான், எதிரிகளோடு தெம்பாக மோத முடியும். அதற்காகத்தான், வாக்காளர் திருத்தப் பணியில், முறையாக அனைத்து ஓட்டுகளையும் சேர்க்க வேண்டும் என்கிறோம்.

அப்படி செய்தாலே, தி.மு.க.,வுக்கு பாதி வெற்றி கிடைத்து விடும்.

தி.மு.க., கூட்டணியில் இருப்போர், விரைவில் வெளியே வருவர் என பழனிசாமி பகல் கனவு கண்டு பேசி வந்தார். ஆனால், எதுவுமே நடக்கவில்லை.

ஆனால், அவரோடு கூட்டணியாக இருந்த பா.ம.க., இரண்டாகி விட்டது. தே.மு.தி.க., வெளியே வந்துவிட்டது. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் போன்றோர் கட்சியில் இருந்தே ஓரங்கட்டப்பட்டு விட்டனர். இதனால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தோற்பது உறுதி. இதை அறிந்துதான், தி.மு.க.,வை நோக்கி குறி வைத்து அடிக்கிறது பா.ஜ., அதற்கு முதல் பலி நான். அதற்கெல்லாம் பயப்படுபவன் அல்ல, இந்த நேரு.

- கே.என்.நேரு

தமிழக அமைச்சர், தி.மு.க.,

Advertisement