நெல்லையில் ஆட்டோ டிரைவர் கொலை ஆட்டோ சகோதரர்கள் 4 பேருக்கு ஆயுள் உயர்நீதிமன்றம் உத்தரவு
  மதுரை:  திருநெல்வேலியில் ஆட்டோ டிரைவரை முன்விரோதத்தில் கொலை செய்த சக ஆட்டோ டிரைவர்களான சகோதரர்கள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. 
 திருநெல்வேலி தச்சநல்லுார் பொன்னையா. ஆட்டோ டிரைவர். குறிப்பிட்ட இடத்தில் ஆட்டோக்களை நிறுத்துவது தொடர்பாக இவருக்கும் சக்திவேல் தரப்பை சேர்ந்த சில ஆட்டோ டிரைவர்கள் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. 
 2015 பிப்.,25ல் பொன்னையாவை சக்திவேல், அவரது சகோதரர்கள் 3 பேர் மோசமான வார்த்தைகளில் திட்டி, ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ததாக பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிந்தனர். 
 சக்திவேல் உள்ளிட்ட 4 பேரையும் திருநெல்வேலி நீதிமன்றம் 2022ல் விடுதலை செய்தது. இதை எதிர்த்து பொன்னையாவின் தாய் மாரியம்மாள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 
 நீதிபதிகள் பி.வேல்முருகன், ஆர்.பூர்ணிமா அமர்வு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு: முழு ஆவணங்களையும் பரிசீலித்ததில் அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டை நிரூபித்துள்ளது. அதையும் மீறி கீழமை நீதிமன்றம் முக்கியமற்ற முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. 
 உண்மைகள் மற்றும் ஆதாரங்களை மதிப்பீடு செய்யத் தவறி 4 பேரை விடுவித்துள்ளது. கீழமை நீதிமன்றம் சாட்சியம், சட்டத்தை சரியாக பரிசீலிக்காமல் உத்தரவிட்டது தவறானது என்பதால், அது ரத்து செய்யப்படுகிறது. மேல்முறையீடு அனுமதிக்கப்படுகிறது. நான்கு பேரும் ஆஜராக வேண்டும். 
 இவ்வாறு உத்தரவிட்டனர். 
 நீதிபதிகள் பி.வேல்முருகன், ஆர்.பூர்ணிமா அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜெயமோகன் ஆஜரானார். சக்திவேல் மற்றும் அவரது சகோதரர்கள் இசக்கிமுத்து, சாமதுரை, மாரிமுத்து ஆஜராகினர். 
 நீதிபதிகள்: உங்களை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது தவறு. நீங்கள் குற்றம் புரிந்துள்ளீர்கள் என ஆவணங்கள், சாட்சியங்கள் அடிப்படையில் இந்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. தண்டனை விதிக்க உள்ளோம். உங்கள் கருத்து என்ன. 
 சக்திவேல் உள்ளிட்ட 4 பேர்: பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. குற்றச்சாட்டிற்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது. 
 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சக்திவேல் உள்ளிட்ட 4 பேருக்கும் தலா ஆயுள் தண்டனை, அபராதம் விதிக்கப்படுகிறது என்றனர். 
மேலும்
-     
        
 35வது நாளாக அரசு நிர்வாகம் முடக்கம்: 'சாதனை படைக்கிறார்' அமெரிக்க அதிபர் டிரம்ப்
 -     
        
 மஹாராஷ்டிராவில் டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல்
 -     
        
 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்: 53 கிலோ பிரிவுக்கு தயாராகும் மீராபாய் சானு
 -     
        
 அமெரிக்க முன்னாள் துணை அதிபர் டிக் செனி காலமானார்
 -     
        
 குருநானக் தேவ் பிறந்தநாள் விழா: அட்டாரி-வாகா வழியாக பாகிஸ்தான் சென்றது முதல் குழு
 -     
        
 பிலிப்பைன்சை புரட்டி போட்ட கடும் சூறாவளி; 26 பேர் பலி