வங்கதேச தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது கலிதா ஜியாவின் பி.என்.பி.,
   டாக்கா:  வங்கதேசத்தில் வரும் பிப்ரவரியில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களை, அந்நாட்டின் முக்கிய எதிர்கட்சியான பி.என்.பி., அறிவித்துள்ளது. 
 நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்தாண்டு ஏற்பட்ட மாணவர் புரட்சியால், பிரதமராக இருந்த ஷேக் ஹசினா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. 
 இதையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. 
 வங்கதேச பார்லிமென்டுக்கு, 2026 பிப்ரவரியில் பொதுத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. 
 இத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான, முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சி வெளியிட்டுள்ளது. 
 மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 237 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. 
 கலிதா ஜியா மூன்று தொகுதிகளிலும், அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். தேவைப்பட்டால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை கட்சியின் தேசிய நிலைக்குழு மாற்றங்கள் செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 
 மீதமுள்ள தொகுதிகள், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
  தேர்தலை சுமுகமாக நடத்த எல்லா தரப்பும் ஒத்துழைக்க வேண்டும். வெளிநாட்டு சக்திகளை ஒரம் கட்டி நிற்க வைக்க வேண்டும். இதையெல்லாம் செய்ய முடியுமா யூனுஸ்ஜி ?மேலும்
-     
        
 35வது நாளாக அரசு நிர்வாகம் முடக்கம்: 'சாதனை படைக்கிறார்' அமெரிக்க அதிபர் டிரம்ப்
 -     
        
 மஹாராஷ்டிராவில் டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல்
 -     
        
 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்: 53 கிலோ பிரிவுக்கு தயாராகும் மீராபாய் சானு
 -     
        
 அமெரிக்க முன்னாள் துணை அதிபர் டிக் செனி காலமானார்
 -     
        
 குருநானக் தேவ் பிறந்தநாள் விழா: அட்டாரி-வாகா வழியாக பாகிஸ்தான் சென்றது முதல் குழு
 -     
        
 பிலிப்பைன்சை புரட்டி போட்ட கடும் சூறாவளி; 26 பேர் பலி