ஆங்கிலத்தில் புலமை இல்லாததால் 7,000 லாரி டிரைவர்கள் வேலை போச்சு
   நியூயார்க்:  அமெரிக்காவில் ஆங்கில புலமை இல்லை என்று கூறி, 7,000 லாரி டிரைவர்களை நீக்கி அந்நாட்டு போக்குவரத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 
 அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். விசா கட்டுப்பாடுகள், குடியேற்ற விதிகள் என பல கெடுபிடிகளை காட்டி வரும் நிலையில், லாரி டிரைவர்களுக்கான விசா வழங்குவதும் சமீபத்தில் நிறுத்தப்பட்டது. 
 இதற்கிடையே விபத்துகள் அதிகரிப்பதாகக் கூறி, ஆங்கிலத்தில் பேசுவது, படிப்பதை அமெரிக்க அரசின் போக்குவரத்துத் துறை கட்டாயமாக்கியது. லாரி டிரைவர்களுக்கு எழுத்துப் பரீட்சை மற்றும் சாலை உத்தரவுகளைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆங்கில அறிவு இருந்தால் போதும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் பேச்சு திறனும் அவசியம் என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்தது. 
 இது பெரும்பாலும் இந்தியர்களையே பாதித்தது. அமெரிக்காவில் லாரி டிரைவர்களாக, இந்தியர்கள், குறிப்பாக சீக்கியர்களே அதிகளவில் பணியாற்றுகின்றனர். அங்கு, ஒன்றரை லட்சம் சீக்கியர் லாரி ஓட்டுகின்றனர். 
 இந்த நிலையில், கடந்த மாத நிலவரப்படி, டிரம்ப் உத்தரவிட்டபடி ஆங்கில புலமைத் தேர்வில் தேர்ச்சி பெறாத 7,248 லாரி டிரைவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக அமெரிக்க போக்குவரத்து அமைச்சர் சீன் டபி தெரிவித்துள்ளார். 
  எல்லோரும் அமெரிக்கா கல்லூரிகளில் போய் ஆங்கிலம் படிச்சு பி.ஹெச்.டி வாங்கி அங்கே லாரி ஓட்டுங்க.
  ஆங்கிலம் அவசியமோ இல்லையோ தமிழ் அவசியம் நமது தமிழக முதல்வர் கருத்து தமிழக சட்டசபை தீர்மானம் அனைத்து கட்சிகளும் ஒரு மனதாக ஆதரவு
  ஒரு மொழியில் பேசும் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் வேறு, அந்த மொழியில் புலமை திறன் வேறு. ஆங்கிலத்தில் புலமைத்திறன் வேண்டுமென்றால், ஷேஸ்பியர் தான் அமெரிக்காவில் லாரி ஓட்ட முடியும்.
  தமிழே தெரியாத தலைமுறையை, தமிழ்நாட்டு ஆசிரியர்களை.. உருவாக்கிய திராவிட அரசியல்.
  ஆங்கிலத்தில் புலமை க்கான தேர்வு இல்லை. குறைந்த பட்சம் ஆங்கிலம் தெரியுமா என தேர்வு. நம்மூரில் தமில் தமில் என்று முல[ழ]ங்குவது போல இருக்கிறார்கள். தமிழ் புலமை வேண்டாம். தமிழாவது தெரியவவேண்டுமே
  டிரைவர்களாக அவர்களை பணியில் அமர்த்துவதற்கு முன்பு அவர்களுக்கு ஆங்கிலத்தில் புலமை இருக்கிறதா இல்லையா என்று அறிந்து அவர்களை பணியில் அமர்த்தியிருக்கவேண்டும். தவறு யாருடையது?
  இங்கே கண்டவன் கார் ஓட்டுறான். அங்கே கண்டவன் லாரி ஓட்டுறான். அவன் ஆக்ஷன் எடுக்கிறான். இங்கே ...
  இங்கே உள்ள டிரைவர்களுக்கு தமிழே தகராறு. இதை ஸ்டாலினிடம் சொல்லுங்கள்
  நமது அமித்ஷா அவர்கள் இதை கவனிப்பாராக
விடியலாரிடமும் சொல்லலாம், ஆனால் மைனாரிட்டி சமூகத்தினர், ஆப்கனிஸ்தான் , அரபு நாட்டினர் என்றால் மட்டும்தான் பொங்குவார்மேலும்
-     
        
 35வது நாளாக அரசு நிர்வாகம் முடக்கம்: 'சாதனை படைக்கிறார்' அமெரிக்க அதிபர் டிரம்ப்
 -     
        
 மஹாராஷ்டிராவில் டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல்
 -     
        
 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்: 53 கிலோ பிரிவுக்கு தயாராகும் மீராபாய் சானு
 -     
        
 அமெரிக்க முன்னாள் துணை அதிபர் டிக் செனி காலமானார்
 -     
        
 குருநானக் தேவ் பிறந்தநாள் விழா: அட்டாரி-வாகா வழியாக பாகிஸ்தான் சென்றது முதல் குழு
 -     
        
 பிலிப்பைன்சை புரட்டி போட்ட கடும் சூறாவளி; 26 பேர் பலி