முதல்வர் துயில் களைவது எப்போது?

2

சென்னை: 'பெண்களுக்கும், பொது மக்களுக்கும் தொடர்ந்து துன்பம் நேரிடுகிறது. முதல்வர் ஸ்டாலின் துயில் களைவது எப்போது' என, த.வெ.க., தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:



அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கோவையில், தாங்க முடியாத கூட்டு பாலியல் கொடுமை நடந்துள்ளது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எங்கே; பெண்களுக்கும், பொது மக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேர்கிறது. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது? கோவை மாணவிக்கு கொடுமை விளைவித்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து, சட்டப்படி தண்டிக்க வேண்டும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

Advertisement