தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு; ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை
  
சென்னை: சென்னையில் இன்று (நவ., 04) 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. 
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (நவ.1) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை செய்யப்பட்டது. 
கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,310க்கு விற்பனை ஆனது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.166க்கு விற்பனை ஆனது. நேற்று (நவ.,03) தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,800க்கு விற்பனை செய்யப்பட்டது. 
கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11.350க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று (நவ., 04) 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. 
கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,250க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.800 குறைந்து நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.165க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
மேலும்
-     
        
 கடும் சட்டங்கள் இருந்தால் தான் பாலியல் சம்பவங்களை தடுக்க முடியும்; அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
 -     
        
 இந்துஜா குழும தலைவர் கோபிசந்த் இந்துஜா காலமானார்
 -     
        
 பாக். சுப்ரீம்கோர்ட் உணவகத்தில் வெடித்த கேஸ் சிலிண்டர்: ஏசி இயந்திரம் பழுது பார்த்தபோது விபரீதம்
 -     
        
 வளர்ச்சியடைந்த பீஹாராக என்டிஏ, வால் மாற்ற முடியும்: சொல்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
 -     
        
 வாரிசு அரசியலை விமர்சித்து சசி தரூர் எழுதிய கட்டுரை: காங்., கோபம்
 -     
        
 சேலத்தில் பாமகவினர் பயங்கர மோதல்