வளர்ச்சியடைந்த பீஹாராக என்டிஏ, வால் மாற்ற முடியும்: சொல்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
பாட்னா: வளர்ச்சியடைந்த பீஹாராக தேசிய ஜனநாயக கூட்டணியால் மாற்ற முடியும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.
பீஹாாில் நவம்பர் 6 ஆம் தேதி முதல்கட்டமாக 121 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இறுதிகட்ட பிரசாரம் நடக்கிறது.இந்த நிலையில் இன்று பாட்னா மாவட்டத்தில் உள்ள வைஷாலியில் தேர்தல் பிரசார பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:
முதல்வர் நிதிஷ்குமார் மீது ஒரு ஊழல் வழக்கு கூட இல்லை.தேசிய ஜனநாயக கூட்டணியால்(என்டிஏ) மட்டுமே பீஹாரை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்ற முடியும். ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத ஒரு தலைவர் ஒரு மதிப்புமிக்க சொத்து. ஆனால் அதேவேளையில் முன்னாள் முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குடும்பம் முழுவதுமே பல ஊழல் வழக்குகளை எதிர்கொள்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மாநிலத்திற்கு ரூ.15 லட்சம் கோடியை விடுவித்துள்ளதாகவும், இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது வழங்கப்பட்ட ரூ.2 லட்சம் கோடியை விட கூடுதலாகும்.
எதிர்கட்சிகளின் இண்டி கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக அளித்த வாக்குறுதி, நடைமுறைக்கு எதிரானது. அதற்கான நிதி ஆதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எதிர்கட்சிகளின் காட்டு ராஜ்ஜியம் ஒழிக்கப்பட வேண்டும்.இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.
15 வருஷமா என்ன பண்ணாராம் ?மேலும்
-
பதவி விலக தயாராக உள்ளேன் அமைச்சர் முன் மா.செ., குமுறல்
-
தி.மு.க.,வில் மனோஜ் பாண்டியன் ஐக்கியம் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்
-
தி.மு.க எம்.எல்.ஏ., மருத்துவமனையை காப்பாற்ற சூழ்ச்சி: பழனிசாமி
-
35வது நாளாக காசில்லை; பணமில்லை 'சாதனை படைக்கிறார்' அமெரிக்க அதிபர்
-
விவசாயிகள் வயிற்றில் அடிக்கலாமா?
-
பட்டீஸ்வரம் கோவிலில் பணிபுரிய ஈ.வெ.ரா., பற்றி தெரிய வேண்டுமாம்; அறநிலையத்துறையின் உச்சகட்ட அபத்தம்