சேலத்தில் பாமகவினர் பயங்கர மோதல்
சேலம்: பாமக நிறுவனர் ராமதாஸின் ஆதரவாளரான சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் கார் மீது பயங்கர தாக்குதல் நடத்தி உள்ளனர்.
@1brசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வடுகம்பட்டி பகுதியில் பாமக கட்சியின் நிர்வாகி தர்மராஜ் துக்க நிகழ்விற்கு சென்று விட்டு சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் (ராமதாஸ் ஆதரவாளர்) மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது அன்புமணி தரப்பினரான சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையிலான 50க்கும் மேற்பட்டோர், சட்டமன்ற உறுப்பினர் அருளின் கார் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் கார்கள்மீது உடுட்டு கட்டை, ஆயுதங்கள் மற்றும் கற்களை வீசி அடித்து உடைத்து தாக்குதல் நடத்தினர்.
பாதிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்; பலி 11 ஆக உயர்வு; உயிர் பிழைத்தவர்கள் பகீர் தகவல்
-
அமெரிக்க தேர்தலில் டிரம்ப் கட்சி படுதோல்வி
-
4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்தது போலீஸ்: கோவை பாலியல் வழக்கில் இபிஎஸ் கேள்வி
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 சரிவு: ஒரு சவரன் ரூ.89,440க்கு விற்பனை
-
நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார் வம்சாவளி இந்தியர் ஜோஹ்ரான் மம்தானி
-
நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் நண்பர் நியமனம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
Advertisement
Advertisement