74 சதவீத இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!
  
ஒட்டாவா: கனடாவில் படிக்க விண்ணப்பித்த 74 சதவீத இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்களை கனடா அரசு நிராகரித்துள்ளது.
வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களின் முதன்மையான விருப்பத் தேர்வாக கனடா இருக்கும். அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் 40 சதவீதம் பேர் இந்திய மாணவர்களாக இருப்பார்கள். கடந்த 2024ம் ஆண்டு மட்டும் 1.88 லட்சம் மாணவர்கள் அந்நாட்டிற்கு படிக்க சென்றனர். இது அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளை காட்டிலும் 2 மடங்கு அதிகம் ஆகும். இதற்கு, உலகத் தரமான கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவை முக்கிய காரணமாக அமைந்து இருந்தது.
ஆனால், தற்போது அந்நாட்டில் வீடுகள் பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாதது மற்றும் உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற குரல் அந்நாட்டில் வலுத்து வருகிறது.இதனையடுத்து விசா விதிமுறைகளை அந்நாடு கடுமையாக்கி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
தற்போது கடுமையான கட்டுப்பாடுகள், இந்தியாவில் இருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களை பெரிதும் பாதித்துள்ளதாக அரசு தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய மாணவர்களின் கல்வி அனுமதி விசா விண்ணப்பங்களில் 74 சதவீதம் நிராகரிக்கப்பட்டு உள்ளன.
அதேபோல், கல்வி அனுமதிக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் பெரும் சரிவைக் கண்டுள்ளது. ஆகஸ்ட் 2023 இல் 20,900 ஆக இருந்து ஆகஸ்ட் 2025 இல் 4,515 ஆகக் குறைந்துள்ளது.
கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் கடந்த மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது, ''கனடா குடியேற்ற விதிமுறைகளில் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதிகமான இந்திய மாணவர்கள் கனடாவில் படிக்க வேண்டும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 வாசகர் கருத்து (5)
         
        Gokul Krishnan   - Thiruvanthapuram,இந்தியா          
 
         04 நவ,2025 - 16:03 Report Abuse
      
  கூட்டம் அங்கும் பொது இடங்களில் அளவுக்கு அதிகமாக ஆட்டம் போட்டதும் ஒரு காரணம்  0
0 
        Reply 
      
     Santhakumar Srinivasalu   - ,          
 
         04 நவ,2025 - 12:41 Report Abuse
      
  ஏன் வெளிநாட்டு கல்விக்கு சமமாக இந்தியாவின் நிலையை உயர்த்த முடியாதா?  0
0 
        Reply 
      
     தத்வமசி   - சென்னை,இந்தியா          
 
         04 நவ,2025 - 11:20 Report Abuse
      
  ஒரு பக்கம் வெளிநாட்டு மோகம் என்றாலும் செல்வதில் தவறில்லை. இந்தியாவில் அந்த வசதிகளும் வாய்ப்புகளும் கிடைத்தால் செல்வது குறையும். சரி, கனடாவில் இப்போது உள்ளவர்கள் கனடாவின் உண்மையான உள்ளூர் வாசிகளா ? உள்நாட்டில் இருந்தவர்களை அடக்கி வெளியில் இருந்து வந்தவர்கள் செய்யும் ஆட்சிதான் இப்போது அமேரிக்கா, கனடா, ஆஸ்திரேலிய நாடுகளில் நடை பெறுகிறது.  0
0 
        Reply 
      
     Ramesh Sargam   - Back in Bengaluru, India.,இந்தியா          
 
         04 நவ,2025 - 10:44 Report Abuse
      
  நமது மக்களிடையே, குறிப்பாக மாணவர்களிடையே வெளிநாட்டு மோகம் குறைய வேண்டும். தாய் நாட்டிலேயே சாதிக்க முயலவேண்டும்.  0
0 
        Reply 
      
     கனேஷ்   - ,          
 
         04 நவ,2025 - 10:38 Report Abuse
      
  இங்கே என்ன இல்லை? ஏன் வெளிநாட்டுக்கு ஓடுறீங்க?  0
0 
        Reply 
      
    மேலும்
-     
        
 கடும் சட்டங்கள் இருந்தால் தான் பாலியல் சம்பவங்களை தடுக்க முடியும்; அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
 -     
        
 இந்துஜா குழும தலைவர் கோபிசந்த் இந்துஜா காலமானார்
 -     
        
 பாக். சுப்ரீம்கோர்ட் உணவகத்தில் வெடித்த கேஸ் சிலிண்டர்: ஏசி இயந்திரம் பழுது பார்த்தபோது விபரீதம்
 -     
        
 வளர்ச்சியடைந்த பீஹாராக என்டிஏ, வால் மாற்ற முடியும்: சொல்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
 -     
        
 வாரிசு அரசியலை விமர்சித்து சசி தரூர் எழுதிய கட்டுரை: காங்., கோபம்
 -     
        
 சேலத்தில் பாமகவினர் பயங்கர மோதல்
 
Advertisement
 Advertisement