கோவையில் குற்றவாளிகளை சுட்டுப்பிடித்தது எப்படி? போலீஸ் கமிஷனர் விளக்கம்
  
கோவை: கோவையில் கல்லூரி மாணவி பலாத்காரம் தொடர்பாக 300 வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் என கோவை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 பேரை துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே தனிப்படை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டுப்பிடித்தனர். இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டு 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. துடியலூர் அடுத்த வெள்ளகிணறு என்ற இடத்தில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது.
 
அங்கு சென்ற போலீசாரை குற்றவாளிகள் ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கினர். பின்னர் போலீசார் அவர்களை சுட்டுப்பிடித்தனர். அவர்கள் 3 பேர் மீது 4,5 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. 3 பேர் மீதும் கொலை, திருட்டு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. சதீஷ் மற்றும் கார்த்தி சகோதரர்கள், குணா உறவினர் ஆவார். 300 சிசிடிவி வீடியோ பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டோம். சதீஷ், குணா ஆகியோருக்கு இரண்டு காலிலும் குண்டு பாய்ந்துள்ளது. கார்த்தி என்பவருக்கும் ஒரு காலில் குண்டு பாய்ந்துள்ளது.
 
'காவல் உதவி' செயலியை பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் செல்போனை அவசர நேரத்தில் மூன்று முறை ஆட்டினால், போலீசார் உதவிக்கு வருவார்கள். புகார் வந்த உடனேயே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 11.20க்கு 100க்கு உதவி கேட்டு அழைப்பு வந்தது. 11.35க்கு சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் திட்டமிட்டு நடந்தது போல் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
  அது எப்படி சுடலாம் என கேட்க , மனித உரிமை ஆணை என்று சொல்லி கொஞ்சம் பேர் வருவான் ??.
  அப்படியே கால் மற்றும் கையை வெட்டி விடுங்க ....
அப்படியே விவேக் ட்ரீட்மென்டும் 
செய்து விட்டால் நல்லது
  இவனுங்க ஆயுளுக்கும் நடந்து போக முடியாத படி காவல்துறை கவணிப்பு இருக்கனும்.கோர்டில் வழக்கு பாட்டுக்கு நடக்கட்டும்.ஸ்டேசனிலிலோ ஜெயிலிலோ இவனுங்கள வச்சு செய்யுங்க ஆபீஸர்ஸ்..
  இதெற்கெல்லாம் மூல காரணம் மதுரை போலீஸ்தான் அவர்கள்தான் 15 வழக்குகளுக்கு மேல் உள்ள ரவுடிகளை மாதம் முழுவதும் ஓயாமல் கோர்ட்டு கேஸ் சிறை என்று கூட்டிக் கொண்டு அலைவதால் கோபமடைந்து அந்கக் கைதிக்கு டோக்கன் போட்டு விடுவார்கள் டோக்கன் என்றால் என்னவென்று கேட்பவர்கள் மதுரை தெப்பக்குளத்திற்கு வந்து அங்கு உலவிக் கொண்டிருக்கும் ஆவிகளை கேட்டு தெரிந்து கொள்ளலாம்!
  கட்டி பிடித்ததால் சுட்டு பிடிதோம் . ஆஹா அருமையான விளக்கம்
  இன்னும் கொஞ்சம் மேலே இடுப்புக்கு கீழே சுட்டு பிடிச்சிருக்கலாம்.
  இருவருக்கு இரண்டு கால்களில், ஒருவருக்கு ஒருகாலில் சுடப்பட்டது. நன்று நன்று. அப்பா மனம் மிகவும் குளிர்த்தது. குறி தவறாது சுட்ட போலீஸ்காரருக்கு தமிழக அரசின் பதக்கம் விரைவில் கிடைக்கும்.
  கல்லூரி விடுதிகளில் பயோ மெட்ரிக் பதிவுகள் உள்ளன . இரவு எட்டு மணிக்கு மேல் எந்த ஒரு மாணவர் / மாணவியும் வெளியே இருக்க வாய்ப்பு இல்லை . இந்த குறிப்பிட்ட மாணவி எப்படி வெளியே இரவு பதினோரு மணிக்கு இருக்கிறாள் ? எதோ வில்லங்கம் .
  அதெப்படி, கொலை மற்றும் இதர குற்றங்கள் சார்ந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் ரவுடி பயலுக இவ்வளவு சுதந்திரமாக சுத்திக்கிட்டு திரிஞ்சானுகளா?
அவுங்கள காப்பாத்த பசக் கட்சி வக்கீலுங்க சாமீன்ல எடுத்துருபனுவளோ என்னவோ??
  நல்ல வேளை. காவல் துறையினருக்கு குற்றவாளிகள் மர்ம நபர்களாக இல்லாமல் இருப்பதால், எப்படி, எங்கு சுட்டு பிடித்தோம், குற்றவாளிகள் பின்னணி என்ன என்பது போன்று விவரங்களை தயக்கமில்லாமல் வெளியிட்டு காவல் துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தக்க வைக்க முடிகிறது. காவல் துறை இனி பாராபட்சம் இல்லாமல் அனைவரையும் குற்றவாளிகளாக மட்டுமே பார்ப்பார்கள் என்று நம்புவோம். வாழ்த்துக்கள்.மேலும்
-     
        
 கடும் சட்டங்கள் இருந்தால் தான் பாலியல் சம்பவங்களை தடுக்க முடியும்; அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
 -     
        
 இந்துஜா குழும தலைவர் கோபிசந்த் இந்துஜா காலமானார்
 -     
        
 பாக். சுப்ரீம்கோர்ட் உணவகத்தில் வெடித்த கேஸ் சிலிண்டர்: ஏசி இயந்திரம் பழுது பார்த்தபோது விபரீதம்
 -     
        
 வளர்ச்சியடைந்த பீஹாராக என்டிஏ, வால் மாற்ற முடியும்: சொல்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
 -     
        
 வாரிசு அரசியலை விமர்சித்து சசி தரூர் எழுதிய கட்டுரை: காங்., கோபம்
 -     
        
 சேலத்தில் பாமகவினர் பயங்கர மோதல்