கவாசாகி ஆப்ரோடு பைக்கிற்கு 7 ஆண்டு 'வாரன்டி' நீ்ட்டிப்பு வசதி

'கவாசாகி' நிறுவனத்தின் 2026 மாடல் 'கே.எல்.எக்ஸ்., 230' ஆப்ரோடு பைக்கிற்கு, ஏழு ஆண்டு உத்தரவாத நீட்டிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு, 2,499 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். இதில், இன்ஜின், கியர்பாக்ஸ் உதிரிபாகங்களுக்கு உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

இந்த பைக்கிற்கு, முதல் மூன்று ஆண்டுகள் உத்தரவாதம் அடிப்படையாக வரும் நிலையில், உத்தரவாத நீட்டிப்பு ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 ஆண்டுகள் வரை உத்தரவாதம் பெற முடியும்.

இந்த பைக் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதால், இதன் விலை 1.99 லட்சம் ரூபாயாக இருந்தது. ஜி.எஸ்.டி., மாற்றத்தால், 60,-000 ரூபாய் குறைந்து, தற்போது 1.30 லட்சம் ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement