ட்ரையம்ப் 'ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்.எக்ஸ்.,' 3.2 வினாடியில், 100 கி.மீ., வேகம்

'ட்ரையம்ப்' நிறுவனம், 'ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்.எக்ஸ்.,' என்ற லிமிடட் எடிஷன் ஸ்ட்ரீட் பைட்டர் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக், 'ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்.எஸ்.,' பைக்கை விட 1.31 லட்சம் ரூபாய் அதிகம். உலகளவில் 1,200 பைக்குகள் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றன.


இந்த பைக்கில் ஏற்கனவே உள்ள, 1,163 சி.சி., இன் லைன் 3 - சிலிண்டர், 12 வால்வ் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இது, 100 கி.மீ., வேகத்தை வெறும் 3.2 வினாடியில் அடையும் திறன் உடையது. இதன் டாப் ஸ்பீடு 250 கி.மீ.,ராக உள்ளது. 6 - ஸ்பீடு பை டைரக்சனல் குயிக் ஷிப்டர் வசதியுடன் வரும் இந்த பைக்கில், காதை பிளக்கும் சவுண்ட் வெளிப்படுத்த கார்பன் பைபர் மற்றும் டைடானியத்தால் உருவான எக்ஸாஸ்ட் அமைப்பு வழங்கப்படுகிறது.
Latest Tamil News

அதிவேக நிலையான பயணத்திற்காக எலக்ட்ரானிக் டேம்பர்கள் சஸ்பென்ஷன், 320 எம்.எம்., ட்வின் டிஸ்க் பிரேக்குகள், 17 அங்குல ரேஸ்ங் டயர்கள், ஐந்து ரைட் மோடுகள், டிராக்ஷன் கன்ட்ரோல், கார்னரிங் ஏ.பி.எஸ்., க்ரூஸ் கன்ட்ரோல், 5 - அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, யூ.எஸ்.பி., சார்ஜிங் உள்ளிட்ட பல வசதிகள் இதில் உண்டு. சீட் உயரம் 830 எம்.எம்., டேங்க் 15.5 லிட்டராக உள்ளது. இந்த பைக், இரு நிறங்களில் கிடைக்கிறது.

Advertisement