உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம்; ரயில் மோதி ஆறு பேர் பலியான சோகம்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூரில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி 6 பேர் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். நேரில் பார்த்தவர்கள் அந்தக் காட்சியைக் கொடூரமானது என்றும், ரயில் மோதியதில் உடல்கள் சிதைந்தன என்றும் விவரித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டார். மீட்புப் பணிகளுக்கு உதவுமாறு மாநிலப் பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு உத்தரவிட்டார்.
நேற்று (நவம்பர் 4)
சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள கெவ்ராவில் இருந்து பிலாஸ்பூர் நோக்கி நேற்று மாலை பயணியர் ரயில் சென்றது. அந்த ரயில் கடோரா, பிலாஸ்பூர் இடையே சென்றபோது, அதே தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இதைக் கண்டு ரயில் இன்ஜின் டிரைவர் பதற்றமடைந்து பிரேக் பிடிப்பதற்குள், பயணியர் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ரயிலில் இருந்த பயணியர் அலறியடித்து இறங்கினர். இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தண்டவாளத்தை கடந்து தாண்டிச்செல்வது ரயில்வே சட்டப்பபடி குற்றம் தண்டனைக்குரியது. ரயில்வே ஸ்டேஷனிலேயே நடந்திருப்பது, ரயில்கள் வரும்போது கூட ரயில்வே போலீசாரின் பாதுகாப்பு குறைவை வெளிப்படுத்துகிறது.
சுற்றும் முற்றும் பார்க்காமல் தண்டவாளத்தை, ரோட்டை கடப்பது, போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை,ரோட்டை கடப்பது., ச்சே எவ்வளவுதான் சொன்னாலும் நம் மக்களுக்கு உறைப்பதில்லை...மீண்டும் மீண்டும் அதே தவறை தொடர்ந்து செய்கிறார்கள்...மேலும்
-
எஸ்ஐஆர் என்ற போர்வையில் ஓட்டுரிமை பறிப்புக்கு பீஹாரும், ஹரியானாவும் சான்று; முதல்வர் ஸ்டாலின்
-
தென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; மீண்டும் ரிஷப் பன்ட்!
-
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
-
900 முறை பாங்காக் பயணித்த தொழிலதிபர்: அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி
-
முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்வதில் யாருக்கு என்ன பயன்? முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
இந்திய விமானப்படை சாகசத்தை கண்டு ரசித்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்