14 இந்தியர்களை திருப்பி அனுப்பிய பாக்.,: ஹிந்துக்கள் என காரணம் சொல்கிறது

4


இஸ்லாமாபாத்: சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவின் 556வது ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்ட இந்தியர்களில் 14 பேரை பாகிஸ்தான் திருப்பி அனுப்பியுள்ளது. அதற்கு அவர்கள் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் என காரணம் தெரிவித்துள்ளது.


குருநானக் தேவ் பிறந்த இடம் பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ளது. நங்கனா சாஹிப் குருத்வாரா எனப்படும் இங்கு நவம்பர் 5 துவங்கி ஒரு வாரம் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. பாகிஸ்தான் அரசு இதற்காக 2,150 இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் சீக்கியர்களுக்கு விசா வழங்கியுள்ளது.


முதற்கட்டமாக , இந்திய சீக்கியர்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள வாகா எல்லை வழியாக 1,900 பேர் நங்கனா சாஹிப் குருத்வாரா சென்றனர்.


ஆனால், 14 பேரை ஹிந்துக்கள் என காரணம் சொல்லி அவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் பிறந்த ஹிந்துக்கள் ஆவார்கள். அவர்கள் இந்திய குடியுரிமை பெற்று டில்லி மற்றும் லக்னோவில் தங்கியுள்ளனர். பாகிஸ்தானில் வசிக்கும் உறவினர்களை சந்திப்பதற்காக சென்றனர்.

ஆனால் பாகிஸ்தானிய அதிகாரிகள், சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே அனுமதிப்போம். நீங்கள் ஹிந்துக்கள். உங்களுக்கு அனுமதி வழங்க முடியாது, ' என அவமானப்படுத்தி திருப்பி அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement