தன்னை முன்னிலைப்படுத்தி நிற்கிறது 'தினமலர்' நாளிதழ்

தினமும் மலரும் தமிழ் தாமரை மலராம், 'தினமலர்' பவள மலராய் பரிணமிக்கும், 75ம் ஆண்டு பவள விழா வாழ்த்துகள்.

தமிழகத்தின் தென்கோடியாம், கேரள மாநிலத்தின் எல்லை கன்னியாகுமரியில், 1951ம் ஆண்டு, 'தினமலர்' எனும் தமிழ் தாமரை மலர் மலர்ந்து, 75ம் ஆண்டை தொட்டு, இன்று பவள விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

தமிழனாய், தமிழக மக்களுள் ஒருவனாய், தமிழக வணிக சமுதாயத்தின் தலைவனாய், தமிழை பிரதிபலிக்கும் சாதாரண குடிமகனாய், என் பார்வையில், 'தினமலர்' தினசரி செய்தித்தாள், தமிழகத்திற்கும், தமிழுக்கும் ஆற்றும் சேவை அளப்பரியது.

ஆன்மிகம், அரசியல், மொழி, கலை, கலாசாரம், பண்பாடு, வணிகம், விவசாயம், செய்தொழில், விளையாட்டு என, அனைத்து துறைகளிலும், தனது தனிப்பட்ட முத்திரையை, பிற போட்டியாளர்களிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்தி, முன்னிலைப்படுத்தி நிற்கிறது 'தினமலர்'.


'தினமலர்' நாளிதழின் பரிணாம வளர்ச்சி பற்றி யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை. அதில், மறைந்த 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் பங்கு மிகப்பெரியது. அவருடைய தொலைநோக்கு சிந்தனை, தமிழுக்கு ஆற்றிய தொண்டு, ஆன்மிகம், நாட்டுப்பற்று, அனைத்தையும் தமிழுக்கான கொண்டாட்டமாகவே, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கருதுகிறது.

தினமலரின் இந்த பவள விழா ஆண்டு தருணத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வதில், பேரமைப்பு பெருமை கொள்கிறது.

அன்புடன்
ஏ.எம்.விக்கிரமராஜா
மாநில தலைவர்,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

Advertisement