தர்மத்தின் குரல் என்றும் ஒலிக்கட்டும்!
தர்மமாக வாழ்தல் ஒரு கடமை;
தர்மம் வழி நடக்க போதித்தல் சமூகத்திற்கு நம் கடமை;
தர்மத்திற்காக குரல் கொடுப்பது மனசாட்சியின் கடமை;
தர்மம் நிலைநிறுத்தப் பாடுபடுதல் — அது கடமை மட்டுமல்ல, இறைவனின் கட்டளை.
இந்த இறைவனின் கட்டளையை எழுத்தின் ஒழுக்கத்தில், செய்தியின் சீர்துாக்கில், உண்மையின் ஒளிச்சுடரில் எழுபத்தைந்து ஆண்டுகளாக, 'தினமலர்' தாங்கி வந்திருப்பது அதன் சாதனை.
உண்மை பேசும் துணிவு, தர்மம் காக்கும் தன்மை, மக்கள் நலன் நோக்கும் பார்வை — இவைதான் உங்கள் அடையாளமும், ஊடகச் சமூகத்தின் ஒளிவிளக்குமான
சிறப்பும்.
அரசியலின் அலையில் அலைந்து அல்லாடிப் போகாமல், மக்கள் இதயத்தில் இடம்பெற்று, காலத்தின் கறைபடியாத நம்பிக்கையாக, 75 ஆண்டுகளை நீங்கள் செதுக்கியுள்ளீர்.
எழுத்து சாயாமல், சொல் சளைக்காமல், உண்மை தளராமல் — உங்கள் பயணம் இப்பவள விழா காலத்திலிருந்து, நுாற்றாண்டு விழா காலத்துக்கு விரிந்து, வளர்ந்திட வாழ்த்துக்கள்.
'தினமலர்' நாளிதழின் இனிய 75ம் ஆண்டு பவளவிழா கொண்டாட்டத்திற்கு பாராட்டுக்கள். இறைவன் வழிகாட்ட, தர்மத்தின் குரல் என்றும் ஒலிக்கட்டும்.
உண்மை, ஒழுக்கம், தர்மம் ஆகியவற்றின் குரலாக விளங்கி வரும் 'தினமலர்' நாளிதழின் இந்தப் பயணத்தை, மீண்டும் வாழ்த்துகிறேன்.
அன்புடன்
எம்.கிருஷ்ணன்
ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்
மேலும்
-
தொடரை வெல்லுமா இந்தியா * இன்று ஐந்தாவது 'டி-20' மோதல்
-
இந்திய ஹாக்கி நுாற்றாண்டு விழா * ஜூனியர் கோப்பையை பெற்றார் உதயநிதி
-
உலக செஸ்: அர்ஜுன், பிரனவ் வெற்றி
-
இந்திய பவுலர்கள் அபாரம் * மூன்று விக்கெட் சாய்த்த பிரசித்
-
ஸ்குவாஷ்: அரையிறுதியில் ராதிகா
-
இந்தியாவில் இருந்து வந்த அழைப்பு தான் ஷேக் ஹசீனாவின் உயிரை காப்பாற்றியது: வன்முறை குறித்த புத்தகத்தில் தகவல்