அதிகரிக்கும் கூட்டநெரிசல் : டில்லியில் நான்கு ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை நிறுத்தம்
புதுடில்லி: டில்லியில் நான்கு முக்கிய ரயில் நிலையங்களில் தினம் தினம் மக்கள் கூட்டம் அதிகரித்துவருவதையொட்டி அங்கு பிளாட்பாரம் டிக்கெட்விற்பனையை நிறுத்தி வைத்து வடக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து டில்லி ரயில்வே கோட்ட வடக்கு ரயில்வே மண்டல தலைமை மக்கள்தொடர்பு அலுவலர் ஹிமான்சு சேகர்உபாத்யாயா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தலைநகர் புதுடில்லி ரயில் நிலையம், டில்லி ரயில் நிலையம், ஆனந்த் விஹார் டெர்மினல், ஆனந்த்விஹார் ஹால்ட் ஆகிய நான்கு ரயில் நிலையங்களில் தினம் தினம் மக்கள் கூட்டம் அதிகரித்துவருகிறது.
எக்ஸ்பிரஸ் ரயில்களைவிட, பயணிகள் ரயில் (பாசஞ்சர் ரயில்) சேவையை அதிகம் பயன்படுத்துவதால் தினம் தினம் மக்கள் கூட்டம் அதிகரித்து கூட்டநெரிசல் ஏற்படுகிறது. கூட்டநெரிசலை தவிர்க்கவும், பொது மக்களின் பாதுகாப்பான பயணத்தை கருத்திற் கொண்டு வரும் 11 -ம் தேதி வரை பிளாட்பாரம் டிக்கெட்விற்பனை நிறுத்தி வைக்கப்படுகிறது.
இந்த உத்தரவு வயதானோர், நோயாளிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆகியோரை உதவிக்கு அழைத்து வருபவர்களுக்கு பொருந்தாது, இதில் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபரில் தீபாவளி, சத்பூஜை போன்ற பண்டிகைகளையொட்டி நாடுமுழுதும் 15 ரயில்நிலையங்களில் முன்னெச்சரிக்கையாக பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை அக்.15 முதல் 25 வரை நிறுத்தி வைத்து மேற்கு மற்றும் மத்திய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக கூட்ட நெரிசல் சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
************************
மேலும்
-
'ஆஷஸ்': ஆஸ்திரேலிய அணியில் லபுசேன்
-
மூன்றாவது சுற்றில் குகேஷ் * உலக கோப்பை செஸ் தொடரில்...
-
வெஸ்ட் இண்டீஸ் 'திரில்' வெற்றி * போராடி வீழ்ந்தது நியூசிலாந்து
-
அபிஷேக், வருண் 'நம்பர்-1': ஐ.சி.சி., 'டி-20' தரவரிசையில்
-
டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ்: கோகோ காப் முதல் வெற்றி
-
ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்: ராகுல்