பூஞ்சேரி இருளருக்கு எட்டு வீடுகள்
மாமல்லபுரம்: மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியில், பாறைக்குன்றை ஒட்டியுள்ள பகுதியில், இருளர்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு நிரந்தர வீட்டுமனை இல்லாத நிலையில், குடிசையில் வசித்து அவதிப்படுகின்றனர்.
மாமல்லபுரம் நகராட்சி 10ம் வார்டு - அ.தி.மு.க., கவுன்சிலரான பழங்குடி பெண் மஞ்சு என்பவர், இங்கு குடிசையில் வசிப்பது குறிப்பிடத்தக்கது. இருளர்களுக்கு வீடு கட்டித்தரும்படி, அவர்கள் வலியுறுத்தியது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், நகராட்சி தலைவர் வளர்மதி, துணைத்தலைவர் ராகவன் ஆகியோர் ஏற்பாட்டில், 'ஹேன்ட் இன் ஹேன்ட்' நிறுவனம், எட்டு வீடுகள் கட்டியது.
தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் இந்த வீடுகளை, பயனாளிகளிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement