மேற்கு ஒன்றியத்தில் கலெக்டர் ஆய்வு

மதுரை: மதுரை மேற்கு ஒன்றியம் பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் பிரவீன்குமார் நேற்று ஆய்வு செய்தார்.

சத்திரப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.98 லட்சம் மதிப்பில் பெரிய நாராயணன்குடி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலை சுத்தம் செய்யும் பணிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து ரூ.16 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி வரும் அங்கன்வாடி மைய கட்டத்தை பார்வையிட்டதுடன், சத்திரப்பட்டி அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன்பின் தொற்றுநோயால் பாதித்த கன்று குட்டியை பார்வையிட்ட கலெக்டர், கால்நடை மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டார். ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் வானதி, பி.டி.ஓ., பிரேமா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement