முதல் ஏஐ திரைப்பட விழா: மும்பையில் பிரமாண்டம்

மும்பை:நாட்டின் முதல், மிகப்பெரிய ஏஐ திரைப்பட தயாரிப்பு விழா மும்பையில் உள்ள ராயல் ஓபரா ஹவுஸில் பிரமாண்டமாக நடைபெற்றதால், மும்பை சினிமா மற்றும் தொழில்நுட்பத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் கண்டது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ராயல் ஓபரா ஹவுஸில் நடைபெற்ற இந்த விழாவில் ஷகுன் பத்ரா, ராம் மத்வானி ரித்தேஷ் தேஷ்முக், தன்மய் பட், அபூர்வா மேத்தா, குணால் கபூர், கரண் அன்ஷுமான் மற்றும் வத்சல் ஷெத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுடன் பிற முக்கிய தொழில்துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் சினிமா கதைசொல்லலின் நுணுக்கங்களை ஆராய கதைசொல்லிகளுக்கு ஒரு தளத்தை வழங்குவதன் மூலம் திரைப்படத் தயாரிப்பின் எதிர்காலத்திற்கான ஒரு புதிய அளவுகோலை அமைப்பதே இந்த விழாவின் நோக்கமாகும். இந்த விழாவில் இந்தியா தவிர வெளிநாடுகளிலிருந்து 1000க்கும் மேற்பட்டோர்களுக்கும் மிகவும் பிடித்த விழாவாக மாறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement