தெருநாய்கள் விவகாரம்; வேலி அமையுங்கள், கண்காணியுங்கள்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடில்லி: ''அரசு கட்டடம், மருத்துவமனை, ரயில் நிலையங்களில் தெருநாய்கள் நுழையாத வகையில் வேலி அமைக்க வேண்டும்,'' என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
* மருத்துவமனைகள் விளையாட்டு வளாகங்கள் ரயில் நிலையங்கள் பள்ளி அருகே என அனைத்து இடங்களிலும் இருந்து உடனடியாக தெரு நாய்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
* பொது இடங்களில் தெருநாய்கள் நுழையாமல் கண்காணித்து தடுக்க வேண்டும்.
* தெருநாய்களுக்கு கருத்தடை செய்து தடுப்பூசி செலுத்தியதற்கு பிறகு பிடிக்கப்பட்ட இடத்திலேயே விடக்கூடாது. அவற்றை முறையான தங்குமிடத்தில் மாற்ற வேண்டும்.
* சாலைகளில் திரியும் கால்நடைகளை கண்காணித்து புகார் அளிக்க குழு அமைக்க வேண்டும்.
* இந்த புதிய உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்.
* இந்த உத்தரவுகளை பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் 8 வாரங்களில் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தெருநாய் பிரச்னை வழக்கு பின்னணி?
* தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து, இது தொடர்பாக கடந்த ஆக., 11ல் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. டில்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சுற்றித்திரியும், தெருநாய்களை பிடித்து உடனடியாக காப்பகங்களில் அடைக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.
* இது தொடர்பாக, சமூக ஆர்வலர்கள் பலர், உச்ச நீதிமன்றத்தில் புதிதாக தாக்கல் செய்த மனுக்கள், ஆக., 22ல் விசாரணைக்கு வந்தன. அப்போது, தெருநாய்க்கடி சம்பவத்தை சமாளிப்பது தொடர்பாகவும், வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது குறித்தும் விளக்கம் அளிக்க, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
* தெருநாய் கருத்தரிப்பு தடுப்பு அறுவை சிகிச்சை எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பாக, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த 27ல் நடந்த விசாரணையின் போது, மேற்கு வங்கம், தெலுங்கானா தவிர, பிற மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தனர்.
* மேலும், தலைமை செயலர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க விடுத்த கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது. நவம்பர் 3ம் தேதி தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம் ஆஜராகி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
* இந்த வழக்கில் இன்று (நவ., 07) சுப்ரீம்கோர்ட் மேலும் கூடுதல் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருக்கும் அனைத்து தெருநாய்களையும் பிடித்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யலாம்...அந்நிய செலாவணியும் கிடைக்கும்..நம் நாட்டிற்க்கும் நிம்மதி.
அனைத்து வீதிகளிலும் சுமார் 15 தெரு நாய்கள் அலைகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள், வீடுகளுக்கு மின்சார அளவீடு செய்ய வரும் ஊழியர்கள், சுகாதார பணி செய்யும் கடைநிலை ஊழியர்கள், கொரியர் அலுவலக ஊழியர்கள்.. இப்படி பலதரப்பட்ட பணி செய்பவர்கள் இந்த நாய்களினால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நாய்களினால் பள்ளி செல்லும் பல சிறு குழந்தைகள், முதியோர்கள் என பாதிக்கபடாதவர்கள் என்று யாருமே இல்லை.
இன்று எனது வீட்டருகே ஒரு தெரு நாய், சுகாதார பணி செய்யும் கடைநிலை ஊழியர் ஒருவரை கடித்து விட்டது.
முன்னேறிய வெளிநாடுகளில் தெரு நாய்களை பார்க்கவே முடிவதில்லை .
மனிதர்கள் குழந்தைப்பேறுக்காக மருந்துகள், மாத்திரைகள், சிகிச்சைகள் எடுத்துக்கொள்கிறார்கள் ... நாய்களுக்கு எதுவும் தேவையில்லை .....
அரசுக்கும் செலவு மிச்சம்.
தாங்களே சட்டம் இயற்றும் சட்டமன்றங்கள் இதற்க்கு ஒரு சட்டம் கொண்டு வந்து பிரச்சனையை தீர்க்க கூடாதா.
ரயில்வே ஸ்டேஷனுக்கு எப்படி வேலி போட முடியும். நீதிபதிகள் காட்டுக்கு வேலி போட்டு காட்டட்டும்.
தெரு நாய்களை கட்டுப்படுத்த ஈஸியான ஒரு ஐடியா இருக்கு. அவைகளிடம் தூரத்தில் கட்டுமர திருட்டு திமுககாரர்கள் வருகிறார்கள் என்று மட்டும் சொல்லி பாருங்கள். துண்டை காணோம் துணியை காணோம்னு அனைத்து தெரு நாய்களும் பிடரி தெறிக்க தலை கால் புரியாமல் ஓடி ஒளிந்துகொள்ளும்.
வேலி அமைக்கும் செலவை விட தெருநாய்களை கொல்லும் செலவு குறைவு ...
இவ்ளோ நாய்களை பிடித்து காட்டில் விட்டுவிடலாம்மேலும்
-
பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிச்சயமாக நாம் கண்டிக்க வேண்டும்; கனிமொழி பதில்
-
பீஹாரில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி அமையும்: பிரதமர் மோடி நம்பிக்கை
-
இந்தியா சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கும்: பாக் அணு ஆயுத சோதனை குறித்து ராஜ்நாத் சிங் பதிலடி
-
எறும்புகளுக்கு பயப்படும் வினோத மனநோய்; தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை
-
இந்தோனேசியாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 20 மாணவர்கள் உள்பட 54 பேர் காயம்
-
ஜனநாயகம், பொது மக்கள் மீது அக்கறை இல்லை: பாஜ மீது ராகுல் சாடல்