ரஷ்யாவில் மாயமான இந்திய மருத்துவ மாணவன்; 19 நாட்களுக்கு பின்பு சடலமாக மீட்பு
உபா: ரஷ்யாவில் 19 நாட்களுக்கு முன்பு மாயமான இந்திய மாணவன் அஜித் சிங் சவுத்ரி, அங்குள்ள அணையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் லக்ஷமங்கர் அருகே உள்ள கபன்வாடா கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் சிங் சவுத்ரி,22. இவர், கடந்த 2023ம் ஆண்டு முதல் ரஷ்யாவின் உபா நகரில் உள்ள பஷ்கிர் மருத்துவ பல்கலையில் எம்பிபிஎஸ் படித்து வந்தார். இவர் கடந்த அக்.,19ம் தேதி பால் வாங்கி வருவதாகக் கூறி, விடுதியில் இருந்து காலை 11 மணிக்கு கிளம்பியுள்ளார். அதன்பிறகு, அவர் மீண்டும் விடுதிக்கு வரவில்லை.
இது தொடர்பாக அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், வொயிட் நதியின் அருகே உள்ள அணையில் அஜித் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இந்திய மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து இந்திய தூதரகம் எந்த அறிக்கையும் வெளியிடாத நிலையில், இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் அஜித்தின் மரணம் குறித்து நேற்று தகவல் அளிக்கப்பட்டு விட்டது.
இதனிடையே, அஜித்தின் உடலை இந்தியா கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மாணவனின் மர்ம மரணம் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்
-
பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிச்சயமாக நாம் கண்டிக்க வேண்டும்; கனிமொழி பதில்
-
பீஹாரில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி அமையும்: பிரதமர் மோடி நம்பிக்கை
-
இந்தியா சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கும்: பாக் அணு ஆயுத சோதனை குறித்து ராஜ்நாத் சிங் பதிலடி
-
எறும்புகளுக்கு பயப்படும் வினோத மனநோய்; தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை
-
இந்தோனேசியாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 20 மாணவர்கள் உள்பட 54 பேர் காயம்
-
ஜனநாயகம், பொது மக்கள் மீது அக்கறை இல்லை: பாஜ மீது ராகுல் சாடல்