அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: இந்த முறை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கல்வி சீர்திருத்தம், கல்வி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அண்டை நாடான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீரில், பாகிஸ்தான் அரசின் தவறான நிர்வாகம், ரேஷனில் கோதுமை மற்றும் மின்சாரம் வழங்குவதில் குளறுபடி, ஆளும் கட்சியினருக்கு அதிகாரிகளின் வரம்பற்ற சலுகைகள் ஆகியவற்றை கண்டித்து, அங்கு வசிக்கும் மக்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து வன்முறை வெடித்தது. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் ஓய்ந்தது.
இந்நிலையில், அங்கு மீண்டும் மாணவர்கள் போராட்டத்தை துவக்கி உள்ளனர். இந்த முறை, கல்வியில் சீர்திருத்தம், கல்வி மற்றும் மதிப்பீட்டு முறையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாத துவக்கம் முதல் போராட்டம் அமைதியாக நடந்து வந்தது. ஆனால், முசாபராபாத் நகரில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை தொடர்ந்து போராட்டம் தீவிரம் அடைந்தது.
இதனைத் தொடர்ந்து போராட்டம் வன்முறையாக மாறியது. சில இடங்களில் டயர்களை எரித்தும், பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும் மாணவர்கள் கோஷம் போட்டனர். இந்த போராட்டம் முதலில் முசாபராபாத் நகரில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் இருந்து தான் துவங்கியுள்ளது. இதனையடுத்து அங்கு அரசியல்சார்ந்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டும் கல்வி கட்டணமாக 3 அல்லது 4 மாதங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் சம்பள உயர்வு கோரி ஆசிரியர்களும் களத்தில் இறங்கினர். தற்போது மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் மாணவர்கள் போராட்டம் காரணமாக அந்நாட்டு அரசு கவிழ்ந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் மாணவர்கள் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
எங்கெங்கோ மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அந்த கொடுங்கோலர்களின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தத்தான் ஒருவரும் மெனக்கெடவில்லை.
திராவிட மாடல் நினைவு வருது
நல்ல முயற்சி .. வாழ்த்துக்கள் மாணவர்களே ..
இந்தியாவைப் போல ஒரு குடியாட்சி நாடாக மாறி வருகிறதோ அடுத்ததொரு பங்களாதேஷ் உருவாகிறது. பயங்கரவாதம் போய் அந்நிய சக்திகள் ஆளுமை உருவாகுமோ
சீக்கிரம் தமிழ்நாட்டையும் ஊழலற்ற நல்ல நாடாக மாற்ற மாணவர்கள் முன்வரவேண்டியது காலத்தின் கட்டாயம்
இளைஞர்களை வன்முறைக்கு தூண்டுவது நல்லது அல்ல. யார் ஆட்சி செய்தாலும் ஜனநாயக முறைப்படி அகற்ற வேண்டும். வன்முறையால் அல்ல.மேலும்
-
லாலுவின் 3 தலைமுறைகள் வந்தாலும் தொடக்கூட முடியாது; அமித் ஷா சூளுரை
-
பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்? கேட்கிறார் இபிஎஸ்
-
ஏர் இந்தியா விமான விபத்துக்கு யாரும் விமானியை குறை சொல்ல முடியாது: சுப்ரீம் கோர்ட்
-
திருவனந்தபுரம் டிஐஜி அஜீதா பேகத்திற்கு முதல்வர் விருது
-
நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
-
நான் இல்லையென்றால் இபிஎஸ் முதல்வர் ஆகியிருக்க முடியாது; சொல்கிறார் செங்கோட்டையன்