அரசியலமைப்பைக் காப்பாற்றுவது இளைஞர்களின் பொறுப்பு; விழிப்புடன் இருக்க சொல்கிறார் ராகுல்
பாட்னா: தேஜ கூட்டணி எங்கு தேர்தலில் போட்டியிட்டாலும், அவர்கள் ஓட்டு திருட்டு செய்வதில் ஈடுபடுகிறார்கள். இதைத் தடுத்து நிறுத்தி, அரசியலமைப்பைக் காப்பாற்றுவது பீஹார் இளைஞர்களின் பொறுப்பு. வாக்குச் சாவடிகளில் நீங்கள் அனைவரும்
விழிப்புடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்., எம்.பி.யுமான ராகுல் தெரிவித்து உள்ளார்.
பீஹாரின் பூர்னியாவில் நடந்த, தேர்தல் பிரசாரத்தில் ராகுல் பேசியதாவது: பீஹாரில் ஓட்டு திருட்டு செய்வதை நிறுத்தி அரசியலமைப்பைக் காப்பாற்ற இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும். முதல்வர் நிதிஷ் குமார் மாநில இளைஞர்களை தொழிலாளர்களாக மாற்றியுள்ளார்.
பாஜவும், தேர்தல் கமிஷனும் ஹரியானா தேர்தலில் ஓட்டுக்களை திருடிவிட்டன என்பதை நாங்கள் முழு உலகிற்கும் காட்டியுள்ளோம். அவர்கள் பீஹாரில் ஓட்டுக்களை திருட முயற்சிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தேஜ கூட்டணி எங்கு தேர்தலில் போட்டியிட்டாலும், அவர்கள் ஓட்டு திருட்டு செய்வதில் ஈடுபடுகிறார்கள். இதைத் தடுத்து நிறுத்தி, அரசியலமைப்பைக் காப்பாற்றுவது பீஹார் இளைஞர்களின் பொறுப்பு. வாக்குச் சாவடிகளில் நீங்கள் அனைவரும்
விழிப்புடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
பீஹார் மீண்டும் முன்னேற வேண்டும். உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகள் பீஹாரில் நிறுவப்பட வேண்டும். உலகளாவிய சுற்றுலா மற்றும் தொழில்துறை மையமாக மாற வேண்டும். ஆனால் பிரதமர் மோடி மற்றும் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் இதைச் செய்ய முடியாது. நிதிஷ் குமார் பிரதமர் மோடியால் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுவதால் அவரால் எதுவும் செய்ய முடியாது. பீஹார் அரசு நிதிஷ் குமாரால் நடத்தப்படவில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.
ஆம், அரசியலமைப்பை ராகுல் காந்தி போன்றவர்களிடமிருந்து காப்பாத்த இளைஞர்கள் முன்வரவேண்டும்.
உங்க பாட்டி 1975லே அரசியல் அமைப்பை கட்டி காத்தது தெரியும். நீங்களும் உங்க அம்மாவும் மன்மோகனை எப்படி ரிமோட்டில் ஆட்டி வைத்து இந்த நாட்டையே ஆட்டைய போட்டதும் தெரியும். போ போய் ஓரமா போய் குச்சி மிட்டாய் சப்பிட்டு விளையாடுங்க பப்பு.மேலும்
-
லாலுவின் 3 தலைமுறைகள் வந்தாலும் தொடக்கூட முடியாது; அமித் ஷா சூளுரை
-
பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்? கேட்கிறார் இபிஎஸ்
-
ஏர் இந்தியா விமான விபத்துக்கு யாரும் விமானியை குறை சொல்ல முடியாது: சுப்ரீம் கோர்ட்
-
திருவனந்தபுரம் டிஐஜி அஜீதா பேகத்திற்கு முதல்வர் விருது
-
நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
-
நான் இல்லையென்றால் இபிஎஸ் முதல்வர் ஆகியிருக்க முடியாது; சொல்கிறார் செங்கோட்டையன்