ஜார்க்கண்ட் மத்திய சிறையில் கைதிகள் டான்ஸ் வீடியோ வைரல்: சிறை அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மத்திய சிறையில் கைதிகள் இருவர் நடனமாடிய வீடியோ வைரலானதை தொடர்ந்து அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின் ஹோத்வாரில் பிர்சா முண்டா மத்திய சிறைச்சாலை உள்ளது.இங்குள்ள கைதிகள் இருவர் நடனம் ஆடுவதை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட நிலையில், அந்த வீடியோ வைரலானது.
அந்த வீடியோவில், நடனமாடியிருப்பது, மதுபான ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விது குப்தா, ஜிஎஸ்டியில் பல கோடி மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விக்கி பலோடியா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சிறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட அறிக்கையில் அலட்சியம் குறித்த குற்றச்சாட்டுகள் உண்மை என்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, உதவி ஜெயிலர் தேவ்நாத் ராம் மற்றும் ஜமாதர் வினோத் குமார் யாதவ் ஆகிய இரண்டு அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்ய ஐஜி உத்தரவிட்டார்.
மேலும்
-
லாலுவின் 3 தலைமுறைகள் வந்தாலும் தொடக்கூட முடியாது; அமித் ஷா சூளுரை
-
பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்? கேட்கிறார் இபிஎஸ்
-
ஏர் இந்தியா விமான விபத்துக்கு யாரும் விமானியை குறை சொல்ல முடியாது: சுப்ரீம் கோர்ட்
-
திருவனந்தபுரம் டிஐஜி அஜீதா பேகத்திற்கு முதல்வர் விருது
-
நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
-
நான் இல்லையென்றால் இபிஎஸ் முதல்வர் ஆகியிருக்க முடியாது; சொல்கிறார் செங்கோட்டையன்