ரத்ததான முகாம்

பெரியகுளம்: பெரியகுளம் வடகரை அரசு நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில் ரத்ததான முகாம் சரவணக்குமார் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் சுமிதா, தி.மு.க., நகர செயலாளர் முகமது இலியாஸ் முன்னிலை வகித்தனர்.

பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் பாரதி, வட்டார மருத்துவ அலுவலர் கோமதி, மருத்துவ அலுவலர் சுகன்யா ஆகியோர் ரத்ததானம் செய்வதன் நன்மைகள் குறித்து தன்னார்வலர்களிடம் விளக்கினர். 50 க்கும் அதிகமானோர் ரத்ததானம் வழங்கினர். 40 யூனிட் சேகரிக்கப்பட்டு பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

Advertisement