ஜனநாயகம், பொது மக்கள் மீது அக்கறை இல்லை: பாஜ மீது ராகுல் சாடல்
புதுடில்லி: ''ஜனநாயகம் மீதும், பொது மக்கள் மீதும் பாஜ அரசுக்கு அக்கறையில்லை,'' என காங்கிரஸ் எம்பி ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் மகன் பார்த் பவாருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்துக்கு 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் விதிகளை மீறி 300 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு இருப்பது அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. மேலும் இந்த நிலத்தை வெறும் 500 ரூபாய் முத்திரைத்தாளில் அவர் எழுதி வாங்கியிருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தலித்களுக்காக ஒதுக்கப்பட்ட 1800 கோடி ரூபாாய் மதிப்புள்ள நிலமானது, அமைச்சரின் மகன் நிறுவனத்துக்கு வெறும் ரூ.300 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இத்துடன், முத்திரை கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் திருட்டு மட்டும் நடக்கவில்லை. அதற்கு சட்ட முத்திரையும் குத்தப்பட்டுள்ளது.
ஓட்டுத் திருட்டு மூலம் அமைந்த அரசு நிலத்தை திருடியுள்ளது. எவ்வளவு திருடினாலும் ஓட்டுகளை திருடி மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என அவர்களுக்கு தெரியும். ஜனநாயகம் மீதும், பொது மக்கள் மீதும், தலித்களின் உரிமைகள் மீதும் அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. பிரதமரின் மவுனம் நிறைய பேசுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.
கோடீஸ்வரர்களுக்கு சாதகம்
இதனிடையே பீஹார் சட்டசபை இரண்டாம் கட்ட தேர்தலை முன்னிட்டு பஹல்பூரில் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் தேர்தல் கமிஷன் இணைந்து ஹரியானா சட்டசபை தேர்தலை கடத்திவிட்டனர். தற்போது பீஹார் தேர்தலையும் கடத்த முயற்சி செய்கின்றனர். பீஹாரில் காங்கிரஸ் மற்றும் மகாகத்பந்தன் கூட்டணியின் லட்சக்கணக்கான ஓட்டுக்கள் நீக்கப்பட்டு புதிதாக போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹரியானாவில், அதானி மற்றும் அம்பானிக்கு உதவுவதற்காகவும், கோடீஸ்வரர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதற்காகவும் , மக்களின் நிலங்களை அவர்களுக்கு வழங்கவும், மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை தனியார் மயமாக்கவும் தேர்தல் முடிவை திருடியுள்ளனர். மஹாராஷ்டிராவின் தாராவியில் மட்டும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் அதானியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கார்ப்பரேட்களின் கடன் தொகையை பாஜ அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், அத்தகைய பலன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.
பப்புவுக்கு ஒரு கால் கட்டு போட்டுட்டா எல்லாம் சரியாய் விடும்னு ஒருத்தர் கருத்து கூறியுள்ளார். ......ஒரு அரசனுக்கு அவன் நாட்டில் மட்டும் தான் சிறப்பு. ஆனால் பப்பு என்கிற " கற்றோருக்கு" சென்றவிடமெல்லாம் சிறப்பு தான். அதாவது எல்லா நாட்டிலும் சிறப்போ சிறப்பு. பின்ன கால் கட்டெல்லாம் எதுக்குண்ணேன்.
இவரை இத்தாலி மனநல காப்பகத்தில் சேர்த்து விடுவது நல்லது.
ஐயா தாங்கள் ஒரு மன நோயாளி போலவே பேசுகின்றீர்கள் இந்திய குடிமகனாகவே நீங்கள் இல்லை. முதலில் இந்திய குடிமகன் ஆகுங்க...பிறகு பார்க்கலாம்
திருமணம் செய்து கொள்ளுங்கள் ராகுல் ji
தேர்தல் ஆணையம் எந்த தகவலையும் மத்திய அரசின் அனுமதியின்றி யாருக்கும் கொடுக்க கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும். அப்போது தான் இந்த ஒட்டு திருட்டு என்ற புரட்டு வாதம் ஒழியும். இல்லையெனில் ஜெயிக்க வக்கில்லாத காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தின் மீது பழிபோடும். தொழில் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் கடன் , அதில் வேலைபார்க்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளுக்கு போய் சேரும். இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்க்கும். அதே மாதிரி விவசாயிகளுக்கு கடன்கொடுக்க முடியாது. காரணம் ஏற்கனவே அறுபது சதவீத மக்கள் நாலுமணி நேர விவசாய வேலையில் உள்ளார்கள். பிறநாடுகளில் வெறும் ரெண்டு சதவீத மக்களே விவசாயத்தில் உள்ளார்கள். அதனால் அடானிக்கு கொடுக்கப்படும் கடனை விமர்சிக்க கூடாது.
வெளிநாட்டுக்கார பப்பு சும்மாவே இருக்க மாட்டியா உன் நாட்டுக்கு ஓடு. எங்க நாட்டு எங்களுக்கு பாதுகாக்க தெரியும் அம்மாவை கூட்டிட்டு ஓடிடு
இன்னும் நீங்க பச்சை புள்ளை மாதிரி இருக்குறீங்க என்ன செய்ய இவனுங்க ஆட்டம் உண்மையில் பூமி தாங்காது ஒன்னு பண்ணுங்க காஷ்மீர் டூ கன்னியா குமரி வரை நீதி கேட்டு நெடும் பயணம் செய்யுங்க எல்லாம் எங்க டிராவிட் மாடல் ஸ்டைல் தானுங்க நிச்சயம் பலன் அள்ளிக்குமுங்க தேவை என்றால் எங்கள் அண்ணாமலையை கேளுங்கள்
உங்க வீட்டு பாரின் மாப்பிள்ளைக்கு அரியானாவில் ஏகப்பட்ட ஏக்கரை அள்ளிக் கொடுத்ததே உங்க கட்சி அரசு? அப்போது நீ பிறக்கலை போல பேசுகிறாயே?
அது போல் ராகுலுவும் குழந்தை எண்ணம் கொண்ட அவரு குழாந்தைய போல் கொஞ்ஜு மொழியில் பேசுகிறார். அது பாமர மக்களுக்கு விளங்க வில்லை.
எஙகளுக்கு ஒரு தமிழ் வாத்தியார் இருந்தார். அவர் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர். யாழ்பாண தமிழில் சில வார்த்தைகள் தமிழ் இலக்கண முறையில் சரியானதே. ஆனால் இங்கு நம் தமிழ் நாட்டில் அதை தவறான எண்ணஓட்டத்தில் நாம் அதை எடுத்து கொள்கிறோம். சில சொல் நாற்றம் - நாம் எடுத்து கொள்வது துர்நாற்றம் என்ற அளவில் உபயோக படுத்துகிறோம். நாம் குச்சி ஐஸ் சப்பி சாப்பிடு கிறான் அல்லது உறிஞ்சி சாப்பிடுகிறான் என்று கூறுகிறோம் ஆனால் இலஙகை தமிழ் உச்சரிப்பில் ஐஸ் ஊம்பினீர்களா என்று அவர் கூறினார் நாங்க களெல்லாம் சிரிக்க அவருக்கு புரிய வில்லை. சக ஆசிரியரிடம் கூற அதன் இங்குள்ள வழக்கு தமிழில் தவறான எண்ணமாக படுகிறது என்று விளக்கம் கூறினார்.மேலும்
-
ரஷ்ய ராணுவத்தில் 44 இந்தியர்கள்: வெளியுறவுத்துறை அமைச்சகம்
-
டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ்: கோகோ காப் ஏமாற்றம்
-
வெடிகுண்டு தயாரிப்புக்கு ஆந்திராவிலும் ஆட்கள் சேர்த்த பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்
-
மிளகாய்பொடி தூவி நகைக்கடையில் கொள்ளை முயற்சி: பெண்ணை 20 விநாடிகளில் 17 முறை அறைந்த உரிமையாளர்
-
நிலத்தை அளக்க ரூ.6 ஆயிரம் லஞ்சம்: சர்வேயர், வி.ஏ.ஓ., கைது
-
வாரணாசியில் பிரதமர் மோடி ரோடு ஷோ: பாஜவினர் உற்சாகம்