அன்புமணியை கைது செய்ய கோரி பா.ம.க., புகார்

தேனி: தேனி வடக்கு பா.ம.க., மாவட்டச் செயலாளர் முத்தையா, மாவட்டத் தலைவர் அருள், தெற்கு மாவட்டச் செயலாளர் வீரராஜ், மாவட்டத்தலைவர் ஜெயக்குமார், ஆண்டிபட்டி ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் தேனி எஸ்.பி., சினேஹாபிரியாவிடம் புகார் அளித்தனர். அதில்கூறியிருப்பதாவது:

சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் வாழப்பாடி அருகே உள்ள நிர்வாகியின் துக்க நிகழ்வுக்கு சென்றார். அவரை ஆத்துாரை சேர்ந்த அன்புமணியின் ஆதரவாளர் ஜெயபிரகாஷூம், அவரது ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்தினர். இவர்களை துாண்டிய அன்புமணி மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். சில மாவட்டங்களில் பா.ம.க., நிறுவனத் தலைவர் ராமதாஸின் ஆதர்வாளர்கள்தாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Advertisement