சந்தைபுதுக்குப்பம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி: சந்தை புதுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் சிறுதானிய உணவு திருவிழா நடந்தது.

கண்காட்சியில், தலைமை ஆசிரியர் ஷியாமளா தலைமையில், அறிவியல் ஆசிரியர் சோமசுந்தரம் ஒருங்கிணைப்பில் மாணவர்கள் ரோபோ, ராக்கெட், ஏவுகணை உள்ளிட்ட அறிவியல் படைப்புகள் மற்றும் சிறுதானிய உணவு வகைகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

சுத்துக்கேணி பள்ளி அறிவியல் ஆசிரியர் ரம்யாஸ்ரீ சிறந்த படைப்புகளை தேர்வு செய்தார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கணவா சையது, அக்பர் ராஜ், ஜெயமாலினி, சுகிதா, சங்கீதா, ஷாந்தி, சுபாஷினி, கலையரசி, ஆறுமுகம், அபிராமி, கெஜலட்சுமி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement