நவம்பர் 11ல் பிரதமர் மோடி பூடான் சுற்றுப்பயணம்
புதுடில்லி: வரும் நவம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் பிரதமர் மோடி பூடான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி நவம்பர் 11ம் மற்றும் 12ம் தேதிகளில் பூடானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது. அப்போது, இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெ.வா.நீர்மின் நிலையத்தை அந்நாட்டு மன்னருடன் சேர்ந்து பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
பின்னர் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் வாங்சுக்குடன் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சு நடத்துகிறார். பூடானின் முன்னாள் மன்னரும், தற்போதைய மன்னரின் தந்தையுமான ஜிக்மே வாங்சுக்கின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி கடைசியாக மார்ச் 2024ல் பூடானுக்கு விஜயம் செய்தார், அப்போது அவருக்கு பூடானின் மிக உயர்ந்த குடிமகன் விருதான ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ வழங்கப்பட்டது. இதைப் பெற்ற முதல் வெளிநாட்டு அரசாங்கத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். பிரதமர் மோடி இந்த விருதை இந்திய மக்களுக்கு அர்ப்பணித்தார், இது 140 கோடி குடிமக்களுக்கும் சொந்தமானது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் பூடான் நம் பாரதத்துடன் 37 வது மாநிலமாக இணையும் நம் வற்புறுத்தலால் அல்ல அந்த நாட்டு மக்களின் விருப்பத்தால்மேலும்
-
உத்தராகண்டிற்கு ரூ.8,260 கோடியில் வளர்ச்சி திட்டம்; வெள்ளி விழாவில் பிரதமர் மோடி பரிசு
-
தென்னாப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
-
அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் திமுக அரசு தோல்வி; இபிஎஸ் காட்டம்
-
நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு: கார்கேவுக்கு மோகன் பகவத் பதிலடி
-
பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறி: முதல்வர் ஸ்டாலின்
-
நவம்பர் 12ல் 12 மாவட்டங்கள், நவ., 13ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை