ஆப்ரிக்க நாடுகளில் ஜனாதிபதி சுற்றுப்பயணம்: அங்கோலாவில் சிவப்பு கம்பள வரவேற்பு
லுவாண்டா: ஆப்ரிக்க நாடான அங்கோலாவின் தலைநகர் லுவாண்டாவில் திரவுபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆப்ரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் அங்கோலோ மற்றும் போட்ஸ்வானாவிற்கு செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி ஆவார். டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் அங்கோலா தலைநகர் லுவாண்டாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்று அடை ந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கோலாவின் ஜனாதிபதியை சந்தித்து இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து திரவுபதி முர்மு ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்தியாவும் அங்கோலாவும் இந்த ஆண்டு ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 40வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றன. இந்தப் பயணம் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
அங்கோலா பார்லிமென்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். அங்கோலா பயணத்தை முடித்துக்கொண்டு வரும் நவ., 11ம் தேதி போட்ஸ்வானா செல்கிறார். அந்நாட்டின் தலைநகர் கபொரின் செல்லும் முர்மு போட்ஸ்வானா ஜனாதிபதி டுமா டிகொன் பொகோவை சந்திக்கிறார். அதன்பின், போட்ஸ்வானா பார்லிமென்டிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். நவ., 13ம் தேதி இந்தியா திரும்புகிறார்.
வாசகர் கருத்து (1)
ayyasas - ,
09 நவ,2025 - 14:13 Report Abuse
பிரதமர் மோடி போல் ஜனாதிபதிக்கும் உலக தலைவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருப்பது மகிழ்ச்சி 0
0
Reply
மேலும்
-
ராகுல் எத்தனை யாத்திரை நடத்தினாலும் ஊடுருவல்காரர்களை பாதுகாக்க முடியாது: அமித்ஷா
-
நிதிஷ் குமார் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது; பிரசாந்த் கிஷோர்
-
101வது பிறந்தநாளை கொண்டாடிய திருப்பூர் மூதாட்டி: 7 தலைமுறை உறவுகளுடன் உற்சாக சந்திப்பு
-
கடல்சார் சக்தியாக திகழும் இந்தியா; முப்படை தளபதி பெருமிதம்
-
டீக்கடைகள், தெருமுனைகளில் எஸ்.ஐ.ஆர். விண்ணப்பம் விநியோகம்; 8 அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
-
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆஸி.,க்கு தப்பி ஒட்டம்
Advertisement
Advertisement