10ல் தி.மு.க., ஆலோசனை கூட்டம் நிர்வாகிகளுக்கு மா.செ.,க்கள் அழைப்பு
சேலம்:தி.மு.க.,வின்,
சேலம் மாவட்ட செயலர்களான, ராஜேந்திரன்(மத்திய), சிவலிங்கம்(கிழக்கு)
செல்வகணபதி(மேற்கு) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம்
மாவட்டத்தில் உள்ள, 11 சட்டசபை தொகுதிகளில், கட்சி தலைமையால்
அறிவிக்கப்பட்டுள்ள, பகுதி பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள்,
பி.எல்.ஏ., 2 பாக முகவர்கள், சட்டசபை தொகுதி பார்வையாளர்கள்,
தொகுதி வக்கீல் அணி அமைப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி
ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், நவ., 10 காலை,
9:30 மணிக்கு, சீலநாயக்கன்பட்டி அருகே மதன்லால் மைதானத்தில் நடக்க
உள்ளது. அதில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு குறித்து
ஆலோசிக்கப்படும்.
உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்,
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு தலைமை வகிப்பார்.
அதில், கெங்கவல்லி, ஆத்துார், ஏற்காடு, வீரபாண்டி, சேலம் தெற்கு,
வடக்கு, மேற்கு, ஓமலுார், மேட்டூர், இடைப்பாடி, சங்ககிரி ஆகிய சட்டசபை
தொகுதி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்.
மேலும்
-
நலம் காக்கும் ஸ்டாலின் நரிப்பள்ளியில் முகாம்
-
பயணிகள் நிழற்கூடம் இடிப்பு: மக்கள் மறியல்
-
குளத்தில் மூழ்கி பெண் குழந்தை பலி
-
'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
-
.செந்தில் மெட்ரிக் பள்ளி மாணவி மாநில தடகள போட்டியில் சாதனை
-
ஒரே நாளில் 33,240 டன் ஏற்றுமதி சென்னை துறைமுகம் சாதனை