ஒரே நாளில் 33,240 டன் ஏற்றுமதி சென்னை துறைமுகம் சாதனை
சென்னை:சென்னை துறைமுகம், கடந்த 30ம் தேதி ஒரே நாளில், 33,240 டன் சரக்குகளை ஏற்றுமதி செய்து, புதிய சாதனை படைத்துள்ளது.
நாட்டில் உள்ள பெரிய 12 துறைமுகங்களில், மூன்றாவது பெரிய துறைமுகமாக சென்னை துறைமுகம் திகழ்கிறது. படிப்படியாக வளர்ந்து, இன்று இந்த துறைமுகத்தில், 24 கப்பல்கள் நிறுத்தும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கார்கள், கன்டெய்னர்கள், உரம், எண்ணெய் உள்ளிட்டவை, அதிக அளவில் கையாளப்படுகின்றன.
இந்நிலையில், சென்னை துறைமுகம், கடந்த 30ம் தேதியன்று, ஒரே நாளில் 33,240 டன் சரக்குகளை ஏற்றுமதி செய்து, புதிய சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன், கடந்த 2023ம் ஆண்டு பிப்., 6ம் தேதி, 24,200 டன் சரக்குகள் ஏற்றுமதி செய்தது, சாதனையாக இருந்தது. புதிய சாதனையை நிகழ்த்த உறுதுணையாக இருந்த துறைமுக அதிகாரிகள், பங்குதாரர்கள் உள்ளிட்டோருக்கு, சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை துறைமுகத்தை நவீனமாக்கி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். குறிப்பாக, தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பது, துறைமுகத்தின் கட்டமைப்பு மேம்பாட்டு பணி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஊக்குவிப்பு, ரயில் மற்றும் சாலை போக்குவரத்தை இணைப்பது உள்ளிட்ட பணிகளை படிப்படியாக மேற்கொண்டு வருகிறோம்.
குறிப்பாக, கூடுதல் கன்டெய்னர் முனையம் அமைத்து, பயன்பாட்டிற்கு வரும்போது, சரக்குகள் கையாளுவது, மேலும் 30 சதவீதம் வரை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
2 யானைகள் மோதலில் தந்தத்தை இழந்த 'பீமா'
-
கோவாவில் 'அயர்ன் மேன் 70.3' போட்டி அசத்திய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா
-
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,300 சர்க்கரை ஆலைகளுக்கு எச்சரிக்கை
-
'மாஜி' காதலியுடனான படங்கள் பரப்பியவருக்கு அடி, உதை
-
லோக் ஆயுக்தா நீதிபதிகள் சொத்து விபரம் தாக்கல் செய்ய காங்., - எம்.எல்.சி., 'கிடுக்கி'
-
குட்டை பாவாடை அணிந்திருந்த பெண்ணுக்கு பலாத்கார மிரட்டல்