குளத்தில் மூழ்கி பெண் குழந்தை பலி
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஒன்றரை வயது பெண் குழந்தை, வீட்டின் அருகில் உள்ள குளத்தில் தவறி விழுந்து, நீரில் முழ்கி உயிரிழந்தது.
கும்மிடிப்பூண்டி அருகே பெரியசோழியம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் சேது, 32; கார் ஓட்டுநர். இரவது மனைவி சங்கீதா, 24. இவர்களுக்கு ஒன்றரை வயதில் தர்ஷிணி என்ற பெண் குழந்தை இருந்தது .
இவர்களின் வீடு, பெரியசோழியம்பாக்கம் கிராமத்தில் உள்ள மாங்குளத்தின் அருகே அமைந்துள்ளது. நேற்று காலை, வீட்டருகே தர்ஷிணி விளையாடியபோது, குளத்தில் தவறி விழுந்து நீரில் முழ்கியதாக கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து பெற்றோர் தேடிய போது, தர்ஷிணி குளத்தில் மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே குழந்தையை மீட்ட பெற்றோர், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, மருத்துவர்கள் பரிசோதனையில், குழந்தை ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
2 யானைகள் மோதலில் தந்தத்தை இழந்த 'பீமா'
-
கோவாவில் 'அயர்ன் மேன் 70.3' போட்டி அசத்திய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா
-
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,300 சர்க்கரை ஆலைகளுக்கு எச்சரிக்கை
-
'மாஜி' காதலியுடனான படங்கள் பரப்பியவருக்கு அடி, உதை
-
லோக் ஆயுக்தா நீதிபதிகள் சொத்து விபரம் தாக்கல் செய்ய காங்., - எம்.எல்.சி., 'கிடுக்கி'
-
குட்டை பாவாடை அணிந்திருந்த பெண்ணுக்கு பலாத்கார மிரட்டல்