ஆப்கனில் ஒரே வாரத்தில் 3 முறை நிலநடுக்கம்; பொதுமக்கள் பீதி

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஒரே வாரத்தில் 3 முறை ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 3ம் தேதி ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. இதனால், கட்டடங்கள் இடிந்து விழுந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் கடந்த 6ம் தேதி மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவானது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 180 கிமீ ஆழத்தில் இந்த நில அதிர்வானது உணரப்பட்டது. இதனால், லேசாக கட்டடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

ஒரே வாரத்தில் 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

Advertisement