அத்வானிக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

புதுடில்லி: பாஜ மூத்த தலைவர் அத்வானியின் பிறந்தநாள் முன்னிட்டு, அவரது வீட்டுக்கு சென்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.


பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானிக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் இன்று மாலை அத்வானியின் பிறந்தநாள் முன்னிட்டு, அவரது வீட்டுக்கு சென்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:


அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லத்திற்குச் சென்று அவரை வாழ்த்தினேன். நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவை மகத்தானது. நம் அனைவரையும் பெரிதும் ஊக்குவிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement