பாம்பனில் உள்வாங்கியது கடல் தரை தட்டி நின்ற படகுகள்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் திடீரென கடல் உள்வாங்கியதால் நாட்டுப் படகுகள் தரைதட்டி நின்றன.
பாம்பன் சின்னப்பாலம் மீனவர் கிராமத்தில் 300க்கு மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்க செல்கின்றனர்.
நேற்று காலை இங்கு உள்ள கடற்கரையில் திடீரென 200 மீ., வரை கடல் உள்வாங்கியதால் கரையில் நிறுத்தி இருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டி சாய்ந்து கிடந்தன.
கடற்கரைக்கு வந்த மீனவர்கள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இப்படகுகளை மீட்க முடியாமல் போனதால் மீன் பிடிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கினர். பின் மதியம் 3:00 மணிக்கு பின் கடல் நீர் மட்டம் வழக்கமான அளவுக்கு உயர்ந்ததும் கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது.
மழைக்கால சீசனில் இங்கு கடல் உள்வாங்குவதும், நீர்மட்டம் மீண்டும் உயர்வதும் சகஜம் என மீனவர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பள்ளி செல்லாத 35 குழந்தைகள் கலெக்டரிடம் சி.இ.ஓ., வலியுறுத்தல்
-
வந்தே பாரத் ரயிலுக்கு ஈரோட்டில் வரவேற்பு எர்ணாகுளம்-பெங்களூரு இடையில் இயங்கும்
-
வாக்காளர் பதிவு அலுவலர்களின் உதவி மைய எண்கள் வெளியீடு
-
37 துணை துாதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
-
உடல் பருமன், நீரிழிவு நோய் இருப்பவர்கள் இனி அமெரிக்காவுக்கு செல்வது கடினமே
-
இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் கலெக்டர் எச்சரிக்கை
Advertisement
Advertisement