548 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது
செங்கல்பட்டு: புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கார்களில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பரனுார் சுங்கச்சாவடி அருகில் ஜி.எஸ்.டி., சாலையில் நேற்று மாலை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னை நோக்கி அடுத்தடுத்து வந்த 'டாடா இண்டிகா' மற்றும் 'சுசூக்கி யத்திகா' ஆகிய கார்களை சோதனை செய்தனர்.
இரண்டு கார்களிலும் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 548 மது பாட்டில்கள் மற்றும் 178 புதுச்சேரி சாராய பாட்டில்கள் உள்ளிட்டவை இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, கார்களில் வந்த இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், கொந்தமூர் பகுதியை சேர்ந்த பாலாஜி,38.அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் மோகன், 37.என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார்களை செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
மேலும்
-
பள்ளி செல்லாத 35 குழந்தைகள் கலெக்டரிடம் சி.இ.ஓ., வலியுறுத்தல்
-
வந்தே பாரத் ரயிலுக்கு ஈரோட்டில் வரவேற்பு எர்ணாகுளம்-பெங்களூரு இடையில் இயங்கும்
-
வாக்காளர் பதிவு அலுவலர்களின் உதவி மைய எண்கள் வெளியீடு
-
37 துணை துாதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
-
உடல் பருமன், நீரிழிவு நோய் இருப்பவர்கள் இனி அமெரிக்காவுக்கு செல்வது கடினமே
-
இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் கலெக்டர் எச்சரிக்கை