புதிய கேப்டன் சஞ்சய்: இந்திய ஹாக்கி அணிக்கு
புதுடில்லி: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணிக்கு சஞ்சய் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
மலேசியாவின் இபோ நகரில், வரும் நவ. 23-30ல் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி 31வது சீசன் நடக்கிறது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, தனது முதல் போட்டியில் (நவ. 23) தென் கொரியாவை சந்திக்கிறது. அதன்பின் பெல்ஜியம் (நவ. 24), மலேசியா (நவ. 26), நியூசிலாந்து (நவ. 27), கனடாவை (நவ. 29) எதிர்கொள்கிறது.
இத்தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் 'ரெகுலர் கேப்டன்' ஹர்மன்பிரீத் சிங், மன்பிரீத் சிங், மன்தீப் சிங், கோல்கீப்பர்களான கிருஷ்ணன் பகதுார் பதக், சூரஜ் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. கேப்டனாக சஞ்சய் அறிவிக்கப்பட்டார். சீனியர் வீரர்களான ஜக்ராஜ் சிங், அமித் ரோஹிதாஸ் இடம் பெற்றுள்ளனர். தமிழகம் சார்பில் செல்வம் கார்த்தி தேர்வானார்.
இந்திய அணி: சஞ்சய் (கேப்டன்), பவான் (கோல்கீப்பர்), மோஹித் ஷஷிகுமார் (கோல்கீப்பர்), யாஷ்தீப் சிவாச், அமித் ரோஹிதாஸ், ஜக்ராஜ் சிங், நிலம் சஞ்ஜீப், பூவண்ணா சந்துரா பாபி, ராஜிந்தர் சிங், ராஜ் குமார் பால், நீலகண்ட சர்மா, ரபிசந்திர சிங், விவேக் சாகர் பிரசாத், முகமது ரஹீல், சுக்ஜீத் சிங், ஷிலானந்த் லக்ரா, செல்வம் கார்த்தி, ஆதித்யா அர்ஜுன், தில்பிரீத் சிங், அபிஷேக்.
மேலும்
-
இந்தியா தேடும் குற்றவாளிகள் 2 பேர் அமெரிக்காவில் கைது: நாடு கடத்த ஏற்பாடு
-
ஆப்ரிக்க நாடுகளில் ஜனாதிபதி சுற்றுப்பயணம்: அங்கோலாவில் சிவப்பு கம்பள வரவேற்பு
-
'சிக்கன் நெக்' பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியது இந்தியா!
-
திமுக வைப் போல கட்சி நடத்த அறிவு வேண்டும்: விஜயை மறைமுகமாக தாக்கி பேசிய ஸ்டாலின்
-
நவம்பர் 11ல் பிரதமர் மோடி பூடான் சுற்றுப்பயணம்
-
'இஸ்ரோ' விஞ்ஞானி ஆவேன் 'மாணவ விஞ்ஞானி' ரிஷிதாவின் லட்சியம்