பொது இடத்தில் குப்பை கொட்டும் மக்கள்
திருப்பூர்: திருப்பூர், மங்கலம் ரோடு, செங்குந்தபுரம் பகுதியில், குப்பைகள் வாங்கப்படாததால் பல தெருக்கள் ஒன்றுகூடும் பொது இடத்தில் மக்கள் குப்பை கொட்ட துவங்கினர்.
முன்பு அப்பகுதியில் கொட்டப்பட்டு வந்த குப்பைகள், அகற்றப்பட்டு துாய்மையானது. பிளக்ஸ் பேனர் வைத்து குப்பை கொட்டக்கூடாது என்றும் அறிவிப்பு இருந்தது.
தற்போது மாநகராட்சி ஊழியர்கள் குப்பை வாங்குவதில்லை என்பதால் மக்கள் வேறு வழியில்லாமல் அவ்விடத்தில் மீண்டும் குப்பை கொட்ட துவங்கினர். ஒருவரைப் பார்த்து மற்றொருவர் என பலர் குப்பைகளை கொட்டுகின்றனர். அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன.
குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது, இதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குஜராத்தில் பயங்கரவாதிகள் 3 பேர் சிக்கினர்: சதிச்செயல் முறியடிப்பு
-
அரசு அலுவலக கழிவுப்பொருட்கள் விற்பனை; ஒரே மாதத்தில் ரூ.800 கோடி மத்திய அரசுக்கு வருவாய்
-
இந்தியா தேடும் குற்றவாளிகள் 2 பேர் அமெரிக்காவில் கைது: நாடு கடத்த ஏற்பாடு
-
ஆப்ரிக்க நாடுகளில் ஜனாதிபதி சுற்றுப்பயணம்: அங்கோலாவில் சிவப்பு கம்பள வரவேற்பு
-
'சிக்கன் நெக்' பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியது இந்தியா!
-
திமுக வைப் போல கட்சி நடத்த அறிவு வேண்டும்: விஜயை மறைமுகமாக தாக்கி பேசிய ஸ்டாலின்
Advertisement
Advertisement