அரசு அலுவலக கழிவுப்பொருட்கள் விற்பனை; ஒரே மாதத்தில் ரூ.800 கோடி மத்திய அரசுக்கு வருவாய்
புதுடில்லி: அரசு அலுவலகங்களில் உள்ள பயனில்லாத கழிவுப்பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் கடந்த மாதம் மட்டும் மத்திய அரசுக்கு ரூ.800 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது சந்திரயான்-3 திட்டத்தின் செலவை விட அதிகம் ஆகும்.
அரசு அலுவலகங்களில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பழைய பொருட்கள், பழுதான வாகனங்கள் மற்றும் கழிவுகளை ஏலம் விடப்பட்டு விற்பனை செய்வதன் மூலம் மத்திய அரசுக்கு வருவாய் ஈட்டப்படுகிறது. பயனில்லாத பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இடப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கடந்த 2021ம் ஆண்டு முதல், "துாய்மை மிஷன் 2.0" போன்ற திட்டத்தில், மத்திய அரசு அலுவலக கழிவுகளை சேகரித்து அகற்றவும், மறுசுழற்சி செய்யவும், விற்பனை செய்யவும் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில், அரசு அலுவலகங்களில் உள்ள பயனில்லாத பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் கடந்த மாதம் மட்டும் மத்திய அரசுக்கு ரூ.800 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது, ரூ.615 கோடி மதிப்பிலான, சந்திரயான்-3 திட்டத்தின் செலவை விட அதிகம் ஆகும். 2021ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கியதில் இருந்து மத்திய அரசுக்கு இதுவரை ரூ.4100 கோடி வருவாய் கிடைத்து இருக்கிறது என தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்தின் செயல்பாட்டினை மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, ராம் மோகன் நாயுடு, ஜிதேந்திர சிங் ஆகியோர் பார்வையிட்டனர். "துாய்மை மிஷன் 2.0" திட்டத்தின் கீழ் அரசு அலுவலங்களில் 928.84 லட்சம் சதுர அடி இடத்தில் இருந்த தேவையில்லாத கழிவு பொருட்கள் அகற்றப்பட்டு இருக்கிறது.
அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு பின்னர் தேவையற்ற பொருட்களாக மாறிய பேப்பர் உள்ளிட்ட கழிவுகளை விற்பனை செய்து தூய்மையாக மாற்றுவதே இந்த பிரசாரத்தின் நோக்கம் என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
6 மாதத்திற்கு ஒரு அறிவிப்பு விடுத்து ஒப்பந்தம் ஙுறையில் கழிவுகள் நீக்கப்படுகொறது மாநிலத்தில் அதில் பல அதிகாரிகளின் அரசியல்வாதிகளின் பினாமி ஆனால் வருமானக் கணக்கு இன்றுவரை தெரிவித்தது கிடையாது
10 ரூபா பாலாஜி கையில் கிடைத்திருந்தால், கொள்ளை அறிவாலாயத்திற்கு சென்றிருக்கும்.
டாஸ்மாக் பாட்டில் வைக்கிற கார்டுபோர்டு பாக்ஸில் நல்ல லாபம் பார்த்தவராச்சே.
இதுதான் சாக்குனு முக்கிய வழக்கு பேப்ர்களையும் சேர்த்து போட்டுட போறாங்க.
அது திராவிஷ மாடலின் செயல் தானே
குப்பையிலும் வருமானம் ஈட்டும் நேர்மையான பாஜக அரசு. பாராட்டுக்கள்.
நல்ல முடிவு ! ஸ்டாலின் கையில் இது போன்று கிடைத்திருந்தால் ஆட்டையே போட்டிருப்பார். இப்போது கூட தமிழக அலுவகங்களிலும், காவல்துறை அலுவலகங்களிலும் இருந்த ஏராளமான பொருட்கள் என்னவாயிற்று என்று தெரியவில்லை. ஒரு நயா பைசா கூட கணக்கில் வரவில்லை.
திராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் அவர்களுக்கு லட்டு.
இதனால் தான் TN லெவலுக்கு வடக்கு வர 50 ஆண்டுகள் ஆகும் என்பது, இங்கு எல்லா அரசு ரெகார்ட் எல்லாம் டிஜிட்டல் செய்து விட்டார்கள், TANGEDCO வில் PENSION LIFE CERTIFICATE, TANGEDCO உருவாக்கியுள்ள APP இல் வீட்டில் இருந்தே SUBMIT செய்ய முடியும், இது SOUTHERN STATE நிலை அனால் வடக்கே இன்னும் RECORD என்று மகாபாராத் புசபக விமான காலத்தில் உள்ளனர்
நன்றாக NEWS படிக்கவும். இதில் பழைய பேப்பர் மட்டும் இல்லை, பழைய வாகனங்களும் உண்டு. Tamilnadu Govt buses எல்லாம் பேரிச்சை பழத்துக்கு போடலாம் .
இவர்கள் பழைய RECORD எல்லாம் அழித்து விட்டு , RSS தான் நாட்டிற்கு சுதர்ந்திரம் என்று புதிய சரித்திரம் எழுத இந்த மாதிரி சித்து வேலைகள் நடக்குது
இதுபோன்று தமிழக அரசு விற்பனை செய்திருந்தால் ஒத்த ரூபா கணக்கில் வந்திருக்காது. அத்தனை பணத்தையும் ஆட்டைய போட்டிருப்பாங்க.
பெரியவரே பாவம் இங்கு எல்லா அரசு கோப்புகளும் DIGITALISED ஆகி விட்டது, லைப் CERTIFICATEக்கூட வங்கிக்கு செல்லாமல் ONLINE முறையில் வந்து வீட்டது இன்னமும் நீர் வராட்டி அடுப்பில் சமையல் செய்வது போல பேசுகிறீர்
திகழ்....எல்லாம் தெரிந்த சொம்பு போல பேசுமேலும்
-
2 யானைகள் மோதலில் தந்தத்தை இழந்த 'பீமா'
-
கோவாவில் 'அயர்ன் மேன் 70.3' போட்டி அசத்திய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா
-
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,300 சர்க்கரை ஆலைகளுக்கு எச்சரிக்கை
-
'மாஜி' காதலியுடனான படங்கள் பரப்பியவருக்கு அடி, உதை
-
லோக் ஆயுக்தா நீதிபதிகள் சொத்து விபரம் தாக்கல் செய்ய காங்., - எம்.எல்.சி., 'கிடுக்கி'
-
குட்டை பாவாடை அணிந்திருந்த பெண்ணுக்கு பலாத்கார மிரட்டல்