'எத்தனை பேர் ஜெயிப்பாங்க?'
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் சீமான் பேசுகையில், 'இந்த ஆட்சியாளர்கள் கொடுக்கும் இலவசங்களை எதிர்பார்க்காமல், கையேந்தி வாங்காமல், தன்மானம் உள்ளவர்களாக நாம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். அன்று வெள்ளையர்களிடம் சிக்கி தவித்த நாம், இன்று 60, 70 ஆண்டுகளாக இந்த கொள்ளையர்களிடம் சிக்கி தவிக்கிறோம்.
'பிப்., 7ம் தேதி, மாற்றத்தை நிகழ்த்தும் மக்கள் மாநாட்டை நடத்துவேன். அந்த மாநாட்டில், 234 தொகுதிகளுக்குமான, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். அதில், 100க்கும் மேற்பட்டோர், 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். 117 ஆண்கள், 117 பெண்கள். இனி இளையோர் கூட்டம் தலைமை ஏற்கும்...' என்றார்.
அவ்வழியே சென்ற ஒருவர், '234 பேர்ல எத்தனை பேர் ஜெயித்து, கோட்டைக்கு போவாங்க என்பதை சொல்ல மாட்டேங்கிறாரே...' என, முணுமுணுத்தபடியே நடையை கட்டினார்.
மேலும்
-
நலம் காக்கும் ஸ்டாலின் நரிப்பள்ளியில் முகாம்
-
பயணிகள் நிழற்கூடம் இடிப்பு: மக்கள் மறியல்
-
குளத்தில் மூழ்கி பெண் குழந்தை பலி
-
'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
-
.செந்தில் மெட்ரிக் பள்ளி மாணவி மாநில தடகள போட்டியில் சாதனை
-
ஒரே நாளில் 33,240 டன் ஏற்றுமதி சென்னை துறைமுகம் சாதனை