பள்ளிகளுக்கு இடையே யோகா போட்டி: உடலை வளைத்து அசத்திய மாணவர்கள்

கோவை: கோவை மாவட்ட 'ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ்' நலச்சங்கம் சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான யோகா போட்டி, கோவையில் இரு இடங்களில் நடந்தது.

இப்போட்டியில் அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த, 720 மாணவர்கள் ஆர்வம் காட்டிய நிலையில் ஒரு மாதமாக தேர்வு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதிலிருந்து தனித்திறமை அடிப்படையில், 72 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு தேவாங்க பள்ளியில் இறுதிப்போட்டி நடந்தது.

விஜயலட்சுமி, சாந்தி மற்றும் 'ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ்' நலச்சங்க செயலாளர் சண்முகசுந்தரம் ஆகிய மூன்று பேர் நடுவர்களாக இருந்து,வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

'ஹேண்ட் பேலன்ஸ்' மாணவர்களுக்கான 'ஹேண்ட் பேலன்ஸ்' பிரிவில், கீர்த்திமான் பள்ளியை சேர்ந்த குகன், சிந்தி வித்யாலயா பள்ளி நிஹித், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசுப் பள்ளி முகமது ஆகியோரும், மாணவியர் பிரிவில் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி மாணவி ரிஷாலி, சிந்தி வித்யாலயா பள்ளி பூஜாஸ்ரீ, கீர்த்திமான் பள்ளி நிதர்சனா ஆகியோர்முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

'லெக் பேலன்ஸ்' 'லெக் பேலன்ஸ்' பிரிவில் சிந்தி வித்யாலயா பள்ளிநிஹித், ராமகிருஷ்ணா பள்ளி கிருபாகரன் ஆகியோர் முதல் இரு இடங்களையும், மாணவியர் பிரிவில் சிந்தி வித்யாலயா பள்ளி மதுஸ்ரீ, சைதன்யா பள்ளி மாணவியர் கவிஸ்ரீ,விஷிதா ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர்.

'பார்வேர்டு பெண்டிங்' 'பார்வேர்டு பெண்டிங்' போட்டியில், சிந்தி வித்யாலயா பள்ளி மாணவர் அஷ்வின், ராமகிருஷ்ணா பள்ளி அமர்நாத், பயனீர் மில்ஸ் பள்ளி சரத் ஆகியோரும், மாணவியர் பிரிவில் பயனீர் மில்ஸ் தேஜாஸ்ரீ, சிந்தி வித்யாலயா அர்ஷிதா, பிருந்தாவன் பள்ளி லக்சனா ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர்.

'பேக்வார்டு பெண்டிங்' 'பேக்வார்டு பெண்டிங்' பிரிவில், பயனீர் பள்ளி மாணவி இலக்கியா, ராமகிருஷ்ணா பள்ளி மாணவியர் ஆராதனா,மித்ரா ஆகியோரும், மாணவர்கள் பிரிவில் பயனீர் பள்ளி நாகேஷா, சிந்தி பள்ளி லிங்கேஸ்வரன், ராமகிருஷ்ணா பள்ளி அபிஷேக் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

'பாடி டிவிஸ்ட்' 'பாடி டிவிஸ்ட்' பிரிவில், சிந்தி பள்ளி வெற்றி செல்வன், ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி கவிதன், கீர்த்திமான் பள்ளி சஞ்சய் ஆகியோரும், மாணவியர் பிரிவில் சிந்தி பள்ளி சம்யுக்தா, பயனீர் பள்ளி மாணவியர் பூஜா மற்றும் பூஜனா ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement