'நாகேந்திரனின் முகத்தை பார்த்தாலே தெரியும்' 

@block_B@

'நாகேந்திரனின் முகத்தை பார்த்தாலே தெரியும்'

வழக்கறிஞர் ஆனந்தன் கூறியதாவது: நாகேந்திரன் சிறையில் இருக்கும் போதே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 'அப்ரூவராக' மாறி விடுவேன் என மிரட்டினார். அவர் அப்ரூவராக மாறினால், இந்த கொலை வழக்கில் முக்கிய அரசியல் புள்ளிகள் சிக்குவர். இதனால், ஒரு நாடகத்தை அரங்கேற்றி, நாகேந்திரனை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கும் வகையில், அவரை தப்ப விடுவதற்காக, இறந்து விட்டார் என அறிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டு, நாகேந்திரன் உயிரோடு தப்ப விடப்பட்டு உள்ளார். இறந்து போன வேறொரு நபரின் முகத்தை, நாகேந்திரனின் முகத்தை போல, 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்து, நாகேந்திரன் இறந்து போனதாக, உடல் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. நாகேந்திரனின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட உடலில், அவரது முகத்தை பார்த்தாலே, இது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.block_B

Advertisement