ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்கணும் :சி.ஐ.டி.யூ. மாநில மாநாட்டில் தீர்மானம்

கோவை: கோவையில் சி.ஐ.டி.யூ.16வது மாநில மாநாடு எஸ்.என்.ஆர். கல்லுாரி அரங்கில் நடந்து வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து, 1000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில், மூத்த தொழிற்சங்கத் தலைவர் டி.கே.ரங்கராஜன், அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன், ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

அரசுத் துறைகளில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழக்கம் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். பருவகால ஊழியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழ்நாடு மின்சாரத் துறையைப் பொதுத்துறையாகப் பாதுகாக்க வேண்டும்.

பட்டாசு தொழிலில் வெடி விபத்துகளைத் தடுத்து, பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். தேனி அண்ணா கூட்டுறவு நூற்பாலைத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஆட்டோ மீட்டர் கட்டணம் அறிவித்து ஆட்டோ செயலியை அமல்படுத்த வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை-, வீடு வழங்க வேண்டும்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டத்தை, முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement