உடல் பருமன், நீரிழிவு நோய் இருப்பவர்கள் இனி அமெரிக்காவுக்கு செல்வது கடினமே
வாஷிங்டன்: அமெரிக்க விசாவுக்கு வெளிநாட்டினர் விண்ணப்பிக்கும் போது, விரிவான உடல் பரிசோதனையை மேற்கொள்ளும்படி, அமெரிக்க வெளியுறவு துறை உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, விசா பெறுவது மேலும் கடினமாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டாவது முறையாக பதவியேற்றது முதல், குடியேற்ற நடைமுறைகளில் கெடுபிடி காட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் 'எச்1பி' விசாவுக்கான கட்டணத்தை வரலாறு காணாத வகையில் உயர்த்தினார்.
அடுத்ததாக தற்போது, அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு, விரிவான உடல்நலப் பரிசோதனையை மேற்கொள்ளும்படி, வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து, அமெரிக்க வெளியுறவு துறை தன் துாதரகங்கள் மற்றும் துணை துாதரகங்களுக்கு அனுப்பியுள்ள ரகசிய சுற்றறிக்கையில், 'விசா கோரும் விண்ணப்பங்களை அதிகாரிகள் மதிப்பிடும் போது, விண்ணப்பதாரரை மிகவும் விரிவான உடல்நலப் பரிசோதனை மேற்கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதயம், சுவாசம், புற்று நோய், நீரிழிவு, வளர்சிதை மாற்றம், நரம்பியல் மற்றும் மனநலம் உள்ளிட்ட நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான பணத்தை செலவழிக்கக் கூடியவர்களா என்பதை, விசா அதிகாரிகள் மதிப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர் அரசின் உதவியை நாடமாட்டார் அல்லது அரசு செலவில் நீண்ட கால மருத்துவ பராமரிப்புக்கு செல்லமாட்டார் என்பதை உறுதி செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.
இந்த புதிய நடைமுறையின்படி, உடல் பருமன், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் பாதிக்கப்பட்டோரின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
வாசகர் கருத்து (11)
Ramesh Trichy - ,இந்தியா
09 நவ,2025 - 09:44 Report Abuse
When you get down from an International flight in America, you can only see people with XXL & XXXL sizes. 0
0
Reply
Swaminathan L - ,இந்தியா
09 நவ,2025 - 09:22 Report Abuse
விசாவுக்கு விண்ணப்பிக்கையில் மருத்துவக் காப்பீட்டு ஆவணமும் டிக்கெட்டும் அங்கே தங்குவதற்கான ஏற்பாடு ஆவணமும் தந்து விடுகிறோம்.
மருத்துவக் காப்பீட்டுத் தொகை குறைந்தது ஒரு லட்சம் டாலர் அல்லது அதற்கு மேற்பட்டு இருக்கும் நிலையில் விசா வழங்குவது வரி. 0
0
Reply
naranam - ,
09 நவ,2025 - 09:20 Report Abuse
ஆஹா! இது போல அனைத்து நாடுகளும் முடிவெடுத்து விட்டால் பெரும்பாலான மக்கள் வெளி நாடுகளுக்குச் செல்லமுடியாமல் போய்விடும். உள்நாட்டுப் பிரயாணம் அதிகரிக்கும். விமான நிறுவனங்கள் ஏர்லைன்ஸ் ஆகியவற்றிற்கு மூடுவிழா செய்து விடலாம்.. சிறப்பு.. 0
0
Reply
Balasubramanian - ,
09 நவ,2025 - 08:15 Report Abuse
அடுத்தது கை கால்களில் ஐந்து விரல்கள் உள்ளவர்கள் வரக் கூடாது என்பார்களோ? 0
0
Reply
rama adhavan - chennai,இந்தியா
09 நவ,2025 - 07:32 Report Abuse
இது வதந்தி. விண்ணப்ப படிவத்தில் இல்லாத கேள்விகளை துதரக அதிகாரி கேட்க மாட்டார். 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
09 நவ,2025 - 07:25 Report Abuse
அவர்கள் குறிப்பிட்ட அத்தனை பிரச்சினைகளும் அமெரிக்கர்களுக்கே அதிகம். அவர்களை துரத்திவிடுவாரா டிரம்ப் அவர்கள்? அமெரிக்கர்களின் நிலை இன்று - குரங்கு கையில் பூ மாலையை கொடுத்துவிட்ட நிலை. 0
0
Reply
சண்முகம் - ,
09 நவ,2025 - 06:40 Report Abuse
பணம் இருக்கோ இல்லையோ, அவசர சிகிச்சை அளித்தே ஆக வேண்டும் என்பது அமெரிக்காவின் சட்டம். வெளிநாட்டினர் ஒருவர் மாரடைப்பு என்று மருத்துவ மனை சென்றால் பணம் இல்லாவிட்டாலும் சிகிச்சை அளித்தாக வேண்டும். இம்மாதிரி அவசர சிகிச்சை சர்வ சாதாரணமாக 1,00,000 டாலர் (₹88,00,000) ஆகும். இந்த செலவு அமெரிக்க குடிமக்களின் வரிப்பணத்திலிருந்து எடுக்கப்படும். வெளிநாட்டவருக்கு அமெரிக்கர்கள் ஏன் செலவு செய்ய வேண்டும். 0
0
Reply
Elango Palaniappan - ,
09 நவ,2025 - 06:19 Report Abuse
The most fat people in the world are Americans. 0
0
Reply
Vasan - ,இந்தியா
09 நவ,2025 - 05:38 Report Abuse
This discrimination is punishable.
Count down starts for Trump administration, if this is enforced. 0
0
visu - tamilnadu,இந்தியா
09 நவ,2025 - 06:31Report Abuse
டிரம்ப் இது 2 ம் முறை அமெரிக்கா அதிபர் தேர்தலில் 3 ம் முறை போட்டியிட அனுமதியில்லை என்ன இவர் கட்சியை காலிசெய்து விடுவார் போல 0
0
BALAJI - NAPLES,இந்தியா
09 நவ,2025 - 07:46Report Abuse
It is not India to provide free medical facilities. If you are so bothered pl sponsor every indian going to USA. His country his rules. Not following, stay where ever you are. 0
0
Reply
மேலும்
-
'சிக்கன் நெக்' பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியது இந்தியா!
-
திமுக வைப் போல கட்சி நடத்த அறிவு வேண்டும்: விஜயை மறைமுகமாக தாக்கி பேசிய ஸ்டாலின்
-
நவம்பர் 11ல் பிரதமர் மோடி பூடான் சுற்றுப்பயணம்
-
'இஸ்ரோ' விஞ்ஞானி ஆவேன் 'மாணவ விஞ்ஞானி' ரிஷிதாவின் லட்சியம்
-
நானும் கோலங்களும்... பாலச்சந்தர் பரவசம்
-
இந்தியாவை சுற்றிய டிரைசைக்கிள் நண்பர்கள்
Advertisement
Advertisement